திடீரென்று உச்சம் தொட்ட நாட்டுக் காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணமென்ன?!

தைப்பொங்கலை ஒட்டி காய்கறி மற்றும் பழங்கள் விலை ஏறினாலும் பொங்கல் முடிந்ததும் குறைவது இயல்பு. ஆனால் இந்த முறை தமிழகத்தை வார்தா புயல் தாக்கியதால் உள்நாட்டு காய்கறி உற்பத்தி
திடீரென்று உச்சம் தொட்ட நாட்டுக் காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணமென்ன?!

கடந்த மூன்று மாதங்களாக விலைகளில் பெரிதாக எந்த பேதங்களும் சமர்த்தாக நடந்து கொண்டிருந்த தமிழக காய்கறி மார்க்கெட் விலை நிலவரங்கள், சட்டென்று கடந்த ஓரிரு தினங்களுக்குள் உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக நாட்டுக் காய்கறிவகைகளில் அடங்கும் சுரைக்காய், அவரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய் போன்றவை கிலோ 45 முதல் 50 வரை அதிகரித்து விட்டது. இந்தக் காய்கறிகள் சென்னையைச் சுற்றியுள்ள திருத்தணி, அரக்கோணம், குடியாத்தம், முதலிய ஊர்களிலிருந்து சென்னையை வந்தடையும். 

வெங்காய விலை அப்படியே தான் இருக்கிறது. சில இடங்களில் கிலோ 15 ரூபாய்க்கு கிடைக்கும் வெங்காயத்தை 6 கிலோ 100 ரூபாய் என்று கூவிக் கூவி விற்கும் நிலையும் காணக் கிடைக்கிறது. இந்த திடீர் காய்கறி விலையேற்றத்தைப் பொறுத்தவரை உள்ளூரில் விளையும் வெண்டைக்காய், சுரைக்காய், புடலைங்காய், பீன்ஸ், முதலிய காய்கறிகளின் விலைகளில் தான் மாற்றம் நீடிக்கிறதே தவிர முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி, போன்றவை அனைத்தும் சகாய விலையிலேயே கிடைக்கின்றனவாம். 

கோயம்பேடு காய்கறி மொத்த வணிகர்கள் தெரிவித்த தகவலின் படி டிசம்பரில் சென்னையைக் கடந்த வார்தா புயலால் உள்நாட்டுக் காய்கறி விளைச்சல் கடுமையான பாதிப்புக்கு உள்ளானதால் காய்கறி விலை நிலவரங்களில் தற்போது 20 சதவிகித விலை உயர்வு நீடிக்கிறது. இந்த விலை உயர்வு வரும் மாதங்களில் தேவையான மழைப்பொழிவு இருந்தால் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மீண்டும் காய்கறி வகைகள் நடவு செய்யப்பட்டு அவற்றை அறுவடை செய்ய குறைந்த பட்சம் 2 முதல் 3 மாதங்கள் வரை தேவைப்படலாம். அப்படி காய்கறிகள் நடவு செய்யப்பட்டு போதிய மழை பெய்யும் சூழல் வந்தால் ஏப்ரலுக்குப் பின் காய்கறீ விலைகள் குறையும். ஒரு வேளை மழை பொய்த்துப் போனால் ஏப்ரலுக்குப் பிறகு இப்போதைப் போல் இல்லாது 50 சதவிகித  விலை உயர்வில் நாம் சிக்கிக் கொண்டு திணற வேண்டிய நிலையே ஏற்படும்.

ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலை ஒட்டி காய்கறி மற்றும் பழங்கள் விலை ஏறினாலும் பொங்கல் முடிந்ததும் குறைவது இயல்பு. ஆனால் இந்த முறை தமிழகத்தை வார்தா புயல் தாக்கியதால் உள்நாட்டு காய்கறி உற்பத்தியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com