கிச்சன் குறிப்புக்கள்

காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணெய்யில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத்
கிச்சன் குறிப்புக்கள்

காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணெய்யில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.

குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒருமுறை எண்ணெய் விட்டு வந்தால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

நான்- ஸ்டிக் பாத்திரங்களை மிருதுவான துணி கொண்டோ ஸ்பான்ச் கொண்டோ துடைக்க வேண்டும்.

கிரைண்டர் வாங்கும்போது கல் வெள்ளையாக இல்லாமல் கறுப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

மிக்ஸியின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஓரிரு நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பிளேடுகள் கூர்மையாகிவிடும்.• பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும்போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைத்துவிடும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.

- வீட்டுக் குறிப்புகள்' என்ற நூலிலிருந்து நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com