பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன?

பெரும்பாலும் 22 காரட் தங்கத்தில்தான் விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன.
பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன?

பெரும்பாலும் 22 காரட் தங்கத்தில்தான் விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைந்த காலகட்டத்திலோ அல்லது தேவை அதிகமாக ஏற்படும் காலத்திலோ அதன் வரத்து குறைந்து போகும் நிலையில்தான் 8, 9, 10, 11, 12, 14 காரட் தங்கத்தில் ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.

நாம் உபயோகப்படுத்தும் உலோகம் எதுவானாலும் அதன் மதிப்பு என்பது 99.99 அல்லது 999 ஆகும். மற்றவை வெவ்வேறு உலோகங்களின் கலவைதான். தங்கமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அதனால்தான் அரசு வெளியிடுகிற தங்க பாளம், தங்க பிஸ்கட்டின் மீது 99.99 அல்லது 999 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கத்துடன் மற்ற உலோகம் கலக்கும் போதுதான் அதை உருக்கி நீட்டி தகடுகளாக்கி கண் கவரும் ஆபரணங்களாக மாற்ற முடிகிறது.

தங்கம் பற்றி சில தங்கமான தகவல்கள் :

1. தங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட தரம் 24 காரட்.

2. அமெரிக்க டாலரின் மதிப்பில் வீழ்ச்சி, உள்நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகிற போது தங்கம் விலை திடீரென்று ஏற்றம் காணும்.

3. பத்தரை மாற்றுத் தங்கம் என 24 காரட் தங்கத்தைப் போற்றினாலும் அது ஆபரணம் செய்ய உதவாது. மாற்று உலோகம் கலந்தால்தான் தங்கத்துக்கு சிறப்பு. ஆச்சரியமாக இருக்கிறதா? 24, 22 காரட் தங்கங்களின் வித்தியாசம் என்ன?

24 காரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம். அப்படியானால் 24, 22, 18, 14, 10 மற்றும் 9 காரட் தங்கங்களில் எந்த உலோகங்கள் எல்லாம் கலக்கப்படுகின்றன?வெள்ளி, காப்பர், ஜின்க் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளைத் தங்கத்தில் பல்லேடியம் சேர்க்கப்படுகின்றது. எனவே நாம் 22, 18, 14, 10 மற்றும் காரட் தங்கங்களில் எவ்வளவு பிற உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன என்று இங்குப் பார்ப்போம்.

22 காரட் -  இதில் தங்கத்தில் வெள்ளி, காப்பர் மற்றும் ஜின்க் என மூன்று உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 91.70 சதவீதமும், வெள்ளி 5 சதவீதமும், காப்பர் 2 சதவீதமும், ஜின்க் 1.30 சதவீதமும் 22 காரட் தங்கத்தில் இருக்கின்றன.

18 காரட் - இதில் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. ஜின்க் சேர்க்கப்படுவதில்லை. தங்கம் 75 சதவீதமும், வெள்ளி 15 சதவீதமும், காப்பர் 10 சதவீதமும் 18 காரட் தங்கத்தில் இருக்கின்றன.

14 காரட் - இதில் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 58.30 சதவீதமும், வெள்ளி 30 சதவீதமும், காப்பர் 11.70 சதவீதமும் 14 காரட் தங்கத்தில் இருக்கின்றன.

10 காரட் மற்றும் 9 காரட் - இவற்றில் தங்கத்தில் 18 மற்றும் 14 காரட் போன்று ஜின்க் பயன்படுத்தப்படுவதில்லை. 9 காரட் தங்கத்தில் வெள்ளி 42.5 சதவீதமும், காப்பர் 20 சதவீதமும் கலக்கப்பட்டு இருக்கும். இதில் சிறிதளவு மட்டும் 10 காரட் தங்கத்தில் வித்தியாசம் இருக்கும்.

4. அட்சய திருதியை நாளில், அதாவது சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் நாளில்,  தங்கம் வாங்கினால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கை.

5. தங்கத்துக்கு சிறப்பான மருத்துவ குணம் உண்டு. தங்கம் அணிந்தால், உடல் நலத்துக்கு பல நன்மைகளை விளைவிக்கும். வலது கை விரல்களில் மோதிரம் அணிந்தால் ஆயுள் விருத்தி என்று நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com