மக்களே உஷார்! கொலை, கொள்ளைக்கான புதுப்புது உத்திகளுடன் நடு நிசியில் காத்திருக்கும் திருடர்கள்!

ஆதலால் சக உயிர்களுக்கு உதவியே செய்வதாக இருந்தாலும் யோசித்து நிதானமாக பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அவசியமாகிறது.
மக்களே உஷார்! கொலை, கொள்ளைக்கான புதுப்புது உத்திகளுடன் நடு நிசியில் காத்திருக்கும் திருடர்கள்!

நடு நிசியில் நீங்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில், திடீரென உங்கள் வீட்டு வாட்டர் டேன்க் நிரம்பி தண்ணீர் லீக் ஆகிக் கொண்டிருப்பது போல் ஒரு சத்தம் மெலிதாகக் கேட்கத் தொடங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள். முதலில் மின் மோட்டாரின் ஸ்விட்ச் வீட்டினுள்ளே இருந்தால், அது ஆஃப் செய்யப்பட்டுள்ளதா? என்று சோதிப்பீர்கள். அது ஆஃப் செய்யப்பட்டிருந்த போதும் மீண்டும் தொடர்ந்து தண்ணீர் லீக் ஆகும் சத்தம் வந்து கொண்டே இருந்தால் அது என்னவென்று தெரிந்து கொள்ளும் எண்ணம் நம் தூக்கத்தை நிச்சயம் கெடுக்கும். துணிச்சலானவர்கள் எனில் உடனே கதவையோ, ஜன்னலையோ திறந்து வெளியில் எட்டிப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும் தயங்க மாட்டோம். தண்ணீர் லீக் ஆவதற்கே மக்களின் ரியாக்‌ஷன் இதுவென்றால் ஒரு வேளை நடு நிசியில் வீட்டுக்கு வெளியே குழந்தை அழும் சத்தம் கேட்டால் நாம் என்ன செய்வோம். மனிதாபிமானிகள் எனில் அதிலும் கிராமத்திலிருந்து சமீபத்தில் தான் சென்னை வாழ்க்கைக்கு சிஃப்ட் ஆனவர்கள் எனில் உடனே உதவும் மூடுக்கு வந்து வெளியில் எட்டிப் பார்க்கத்தான் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இவர்களது டார்கெட்டாம். அப்படி வெளியில் வருபவர்களை மனிதத் தன்மையே இன்றி தாக்கி வீட்டுக்குள் நுழைந்து கொலை, கொள்ளை முதல் சகலவிதமான அராஜகங்களிலும் ஈடுபட சில திருட்டுக் கும்பல்கள் கிளம்பியுள்ளனவாம். அதற்கான ஆதாரங்கள் தான் இந்தப் புகைப்படங்கள். திருட்டுக் கும்பல்கள், திருடுவதற்காகத் தேர்ந்தெடுத்த வீடுகளின் முன்னால் காத்திருக்கும் காட்சி தான் இது. முகநூலில் நண்பர் ஒருவர் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இப்படியும் திருடர்கள் கிரியேட்டிவ்வாகச் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆதலால் பொது மக்கள் உஷாராக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதற்காக இரவில் தண்ணீர் டேங்க் ஓவர் ஃப்ளோ ஆகி தண்ணீர் வீணடிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றோ, அல்லது நடு இரவில் தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டும் என்றோ அர்த்தமில்லை. சமூகப் பொறுப்புணர்வுடனும், மனிதாபிமானத்தன்மையுடனும் இருப்பது முக்கியம் தான் ஆனால் அதே அளவுக்கு ஏமாளிகளாக ஆகி விடக் கூடாது, வினையை விலை கொடுத்து வாங்கியவர்களாக ஆகி விடக் கூடாது என்பதும் மிக முக்கியமானதே! ஆதலால் சக உயிர்களுக்கு உதவியே செய்வதாக இருந்தாலும் யோசித்து நிதானமாக பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அவசியமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com