சுவாசிக்கப் பரிசுத்தமான, ஃப்ரெஷ்ஷான காற்றுப்பை... விலை ரூ.150 மட்டுமே! களை கட்டும் ஆன்லைன் விற்பனை!

காற்றைக்கூட விலைக்கு வாங்கிப் பயன்படுத்தக் கூடிய கலி காலம் இதோ வந்து விட்டதே!
சுவாசிக்கப் பரிசுத்தமான, ஃப்ரெஷ்ஷான காற்றுப்பை... விலை ரூ.150 மட்டுமே! களை கட்டும் ஆன்லைன் விற்பனை!

கடந்த வருடம், ராக்கி மலைத்தொடர்களில் இருக்கும் சுத்தமான காற்றை 'விட்டாலிட்டி ஏர்' என்ற கனடாவைச் சேர்ந்த நிறுவனமொன்று விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. இது ஒரு வருடத்திற்கு முந்தைய செய்தி. ஆனால் திடீரென சீனாவில் காற்று மாசுபாடு அதிகரித்ததையொட்டி, சீனாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், சுத்தமான காற்றை பையில் அடைத்து விற்பனை செய்து வருவதாக அறிவித்துள்ளனர். தங்களது காற்றுப்பை விற்பனையை ஆன்லைன் வழியாகத் தொடங்கி இருக்கிறார்கள் இவர்கள்! ஒரு காற்றுப்பையின் விலை ஜஸ்ட் 150 ரூபாய் தானாம். இதுவரை 100 பைகள் விற்றுத்தீர்ந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இவர்களின் விற்பனையின் மவுசை! நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிலிருந்து மனிதர்களைக் காக்க, இம்மாதிரியான முன்னெடுப்புகள் அவசியமானவை. சுத்தமான, சுகாதாரமான காற்றுக்கு விலையாக ஜஸ்ட் 150 ரூபாய் என்பது அப்படி ஒன்றும் அதிகமான விலையில்லை! என்ற அறிவிப்புடன் அந்தச் சகோதரிகள் தங்களது காற்றுப்பை விற்பனை மூலமாக பிரமாதமான பண அறுவடை செய்வார்கள் போலத் தெரிகிறது.

அந்தச் சகோதரிகள் இருவரும் மேற்கு சீனாவிலிருக்கும் ஹூங்காய் மாகாணத்தின், ஷினிங் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் முதலில் திபெத்திய பீடபூமியிலிருந்து புத்தம் புதிய, சுத்தமான காற்றை விற்பனை செய்யப்போவதாக ஆன்லைன் மூலமாக அறிவித்திருந்தனர்.  அதுமட்டுமல்ல; அவர்களிடம், சுத்தமான காற்றை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சமவெளிக்காற்று அல்லது மலைப்பகுதிகளில் கிடைக்கக் கூடிய பரிசுத்தமான காற்று என வெரைட்டியான காற்றை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கும், தேவைக்கும் ஏற்ப விற்பனை செய்யும் முகாந்திரமும் அவர்களிடம் இருந்திருக்கிறது. உள்ளூர் மொழியில், சுத்தமான காற்றை அவர்கள் எவ்விதமாக மலைத்தொடர்கள், சமவெளிகள் மற்றும் பெரிய பூங்காக்களில் இருண்டு பிரித்தெடுத்துப் பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கிறார்கள் என்பதைப் பற்றிய வீடியோ விளக்கப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாம். அந்த வீடியோவில், சகோதரிகள் இருவரும் ஷினிங் பூங்காவில் இருந்து காற்றைச் சேகரிக்கும் விதம் விளக்கப்பட்டுள்ளதாம். உள்ளூர் பணத்துக்கு 15 யென்கள் விலை வைத்து விற்கப்படும் இந்தக் காற்றுப்பைகள் இந்திய ரூபாய் மதிப்பில் பை ஒன்றுக்கு 150 ரூபாய் என விலை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்டுள்ள விலைக்கே இதுவரை 100 க்கும் மேலான பைகள் விற்பனையாகியுள்ள நிலையில் மேலும் பைகள் ஜரூராக விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன என்கின்றன ஷாங்காய் ஊடகங்கள்.

அது மட்டுமல்ல; சுத்தமான காற்றுப்பைகளை விற்பனை செய்யும் அந்த்ச் சகோதரிகளின் நோக்கம் இதன் மூலமாக லாபம் சம்பாதிப்பதோ, அல்லது இதன் மூலமாகப் பிரபல்யம் தேடிக் கொள்வதோ கிடையாது. அவர்கள் மக்களிடையே காற்று மாசுபாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படியொரு விற்பனையைத் துவக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

காற்றைக்கூட விலைக்கு வாங்கிப் பயன்படுத்தக் கூடிய கலி காலம் இதோ வந்து விட்டதே!

இப்படி காற்றைப் பைகளில் அடைத்து விற்க ஆரம்பித்திருப்பது, இவர்கள் மட்டுமே என்று நினைத்து விடாதீர்கள்! சீனாவில் இவர்களுக்கு முன்பே ஒரு கேன் சுத்தமான காற்றின் விலை 18 யென்கள் என விலை வைத்து விற்பனையாகிக் கொண்டு தான் இருந்திருக்கிறதாம். கூடிய விரைவில், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஃப்ரெஷ் காற்றுப்பை, ஆஸ்திரேலியாவிலிருந்து கிடைத்த ரிச் ஃப்ரெஷ் ஏர் என விதம், விதமாய் காற்றுப்பைகள் விலைக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com