சல்வார் கமீஸ் உங்களுக்குப் பிடித்த உடையா? அப்படியெனில் இந்த 9 விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

சல்வார் கமீஸ் உங்களுக்குப் பிடித்த உடையா? அப்படியெனில் இந்த 9 விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
சல்வார் கமீஸ் உங்களுக்குப் பிடித்த உடையா? அப்படியெனில் இந்த 9 விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

சல்வார்-கமீஸ் என்பது, சல்வார், கமீஸ் ஆகிய இரண்டு பகுதிகளை உடைய ஒரு உடை. இது இந்தியப் பெண்களுக்கு மிகவும் பாந்தமான உடை எனலாம். இதனைத் தைப்பதும், உடுத்திக் கொள்வதும் மிக எளிது என்று தோன்றினாலும், சல்வார் கமீஸை பொருத்தமாக அணிவதற்கு சில விஷயங்கலை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மாடர்ன் ஸ்டைலிஷ் லுக் வேண்டுமெனில் உங்களுக்கு ஏற்ற மிகச் சரியான சல்வாரை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை,

1. உடலுக்குப் பொருத்தமான அளவு 

சல்வார் கமீஸ் உடையின் வடிவமைப்பில் உள்ள சிறப்பு எதுவென்றால், அது அணிவதற்கு வசதியான ஒரு உடை. அணிந்து கொள்ளும் போது செளகரியமாக இருக்கும். இந்த உடையை டைட் ஃபிட்டிங் மற்றும் லூஸ் ஃபிட்டிங் என்ற இரண்டு வகையில் தைத்துக் கொள்ளலாம். உங்கள் உடல் வாகுக்கு எது பொருத்தமாக உள்ளதோ அப்படி அணிய வேண்டும்.

பொதுவாக சல்வார் கமீஸை கொஞ்சம் லூசாக, அதே சமயம் உடலுக்கு ஏற்ற வகையில் தைக்க வேண்டும். குர்தா மிகவும் இறுக்கமாக இருந்தால் அது சல்வாரின் அழகைக் கெடுத்துவிடும்.

நீங்கள் வழக்கமாக துணி தைக்க கொடுக்கும் கடையில் சல்வாரைத் தைத்துக் கொள்வது முக்கியம். காரணம் உங்களுக்குத் தேவையான மாற்றங்களையும் உள்ளடக்கி தைப்பார்கள்.

2. துணி வகை 

லினன், காட்டன் போன்ற துணி ரகங்கள் உங்களை பருமனாகக் காட்டக் கூடும். ஜார்ஜெட், ஷிஃபான், க்ரேப் போன்ற துணி வகைகளில் சல்வார் கமீஸ் தைத்துப் போட்டுக் கொள்ளும் போது உடலுக்கு கச்சிதமாக இருக்கும். உடலை உறுத்தாத துணி ரகங்களைத் தேர்ந்தெடுத்து அதன் பின் கமீஸ் தைத்துக் கொள்வது நல்லது.

3. அதிகப்படியான மேட்சிங் வேண்டாம்

மேட்சாக அணிகிறேன் என்று ஒரே நிறத்தில் தலை முதல் கால் வரை எல்லாவற்றையும் ஒரே கலரில் அணியக் கூடாது. உதாரணத்துக்கு கமீஸின் கலர் சிவப்பு என்று வைத்துக் கொண்டால், சிவப்பு துப்பட்டா, சிவப்பு வளையல்கள், சிவப்பு பொட்டு மற்றும் சிவப்பு காதணிகள் என்று ஒரே சிவப்பு மயமாகக் காட்சியளிக்க வேண்டாம். மேட்சிங் பார்ப்பவர்களின் கண்களை உறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது.

உடையின் டிசைனுக்கு ஏற்றவாறு வெவ்வேறு நிறத்தில் அணிகலன்களின் நிறம் பளிச்சென்று இருந்தால் பார்க்க பாந்தமாக இருக்கும்.

4. நீளமான குர்தாவுக்கு பாடியாலா அணியலாமா?

நிச்சயம் அணியக் கூடாது. நீளமான குர்த்தா பாட்டியாலாவுக்கு ஒத்து வராது. பாட்டியாலா சல்வாரின் அழகே அதிலுள்ள அழகான விரிவுகள் தான். நீளமான குர்தாவை அணிந்தால் பாட்டியாவிலுள்ள ஃப்ரில்ஸ் மறைந்துவிடும். பாடியாலா சல்வாரை அணியும் போது முட்டளவு அல்லது அதற்கு ஒரு இன்ச் கீழே உள்ள குர்தா அணிவது பொருத்தமாக இருக்கும். 

5. லைனிங் அவசியம்

சில ஆடைகளுக்கு லைனிங் கட்டாயம் தேவைப்படும். காரணம் அந்தத் துணி வகை மெல்லியதாக இருக்கும். குர்தாவின் அளவுக்கு ஏற்றபடி லைனிங் தைக்க வேண்டும். தவிர சிலர் லைனிங் தைக்காமல் அந்தந்த உடைக்கேற்ற நிறத்தில் நீளமான ஸ்லிப்பை அணிவார்கள். அது சரிதான், ஆனால் குர்தாவை விட ஸ்லிப் நீளமாக இருக்கக் கூடாது. அதற்கு லைனிங் வைத்த சல்வாரே பரவாயில்லை.

6. ஆடைக்கு ஏற்ற அணிகலன்கள்

ஆடைக்கு ஏற்ற பொருத்தமான அணிகலன்களை அணிவது அழகுக்கு அழகு சேர்க்கும் என்பது உண்மைதான். ஆனால் அது சற்று அதிகமாகிவிட்டால் அலங்கோலமாகிவிடும். மிதமான தேவையான அணிகலன்களை அணிவது தான் சல்வார் கமீஸ் போன்ற உடைகளுக்கு சிறப்பான தோற்றத்தை ஏற்படுத்தும்.

சல்வாரில் எம்ப்ராய்ட்ரி வேலைப்பாடுகள் இருந்தால் எளிமையான அணிகலன்கள் அணிந்தால் போதுமானது. கழுத்துப் பகுதியில் உள்ள டிசைன் தெரியவேண்டும் என்று நினைத்தால் நெக்லஸ் அணியாமல் இருப்பது நல்லது. 

7. துப்பட்டா தேவையா

சில சல்வார் கமீஸுக்கு துப்பட்டா அணிவது தேவையிருக்காது. காரணம் அதன் கழுத்துப் பகுதிகளின் டிசைன் மற்றும் வேலைப்பாடுகள் துப்பட்டா அணிந்தால் மறைந்துவிடும்.

ஆனால் துப்பட்டா அணிந்தே ஆக வேண்டும் என்ற சூழலில் மெல்லிய ஷிபான் வகை துப்பட்டாக்களை அணிந்து கொள்ளலாம். அது டிசைன்களை மேலும் எடுப்பாகக் காண்பிக்கும்.

8. துப்பட்டாவின் நீளம்

துப்பட்டாவின் நீளம் பொதுவாக 2.5 மீட்டர் கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் துப்பட்டாவுக்கு பதில் ஸ்டோல் அல்லது ஸ்கார்ஃப் பயன்படுத்துவார்கள். அவை சல்வாரின் அழகைக் கெடுப்பதுடன் மிகவும் குட்டையாக இருக்கும். குட்டைத் துப்பட்டா அணிந்தால் அது சல்வாரின் அழகை கெடுத்துவிடும்.

சல்வார் அணியும் போது நீளமான துப்பாட்டாவை போட்டுக் கொள்ளும் போதுதான் அது அந்த உடையின் அமைப்பை அழகாக்கும். துப்பட்டா கட்டாயம் உங்கள் முட்டு அளவாவது இருப்பது அவசியம். ஒரே பக்கமாக துப்பட்டாவை அணிந்தாலும் சரி மடித்து இரு தோளிலும் போட்டுக் கொண்டாலும் சரி, நீளமான துப்பட்டாக்களே சல்வார் கமீஸுக்கு பொருத்தமானது.

9.காலணியும் முக்கியம்

சல்வார் கமீஸ் அணியும் போது அதற்கேற்ற வகையில் செருப்பு அணிவதுதான் உடையலங்காரத்தை நிறைவு செய்யும் செயல்.

நீளமான சல்வார் போட்டால், அதற்கேற்ற வகையில் குதிகால் உயரமுள்ள காலணியை அணியலாம். முட்டளவு சல்வார் கமீஸ் அணிந்தால், உடைக்கேற்ற டிசைனர் ஜுட்டிஸ் செருப்புக்கள் நன்றாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com