உடல் வலி குணமாக இதை முயற்சித்துப் பாருங்கள்!

புளிய இலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வெது வெதுப்பானதும்
உடல் வலி குணமாக இதை முயற்சித்துப் பாருங்கள்!

புளிய இலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வெது வெதுப்பானதும் அந்த நீரில் குளித்து வந்தால் உடம்பின் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 
-  அமுதா அசோக்ராஜா

நொச்சி  இலையை கொதிநீரில் போட்டு ஆவி  பிடித்தால், சுவாச அவஸ்தையின்றி  இரவில் சுகமாக தூக்கம் வரும்.

மாதுளை பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு  பாதியாகச் சுண்டிப்போகும் வரை கொதிக்க விடவேண்டும். இந்த நீரைப் பருகினால் வயிற்றுப்  போக்கு குணமாகும். வயிற்றுப் பூச்சி, குடல் பூச்சிகள் அகலும்.

- கே.பிரபாவதி

கொய்யா  இலையை அரைத்து வாரம் ஒருமுறை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

கொய்யா இலையுடன் வேப்பிலைகள் சிலவற்றைப்போட்டு, குவளைத்தண்ணீரை கால்பங்கு அளவு சுண்டச்செய்து, குடித்தால் சர்க்கரை நோய் அளவு கட்டுக்குள் இருக்கும்.

சோற்றுக் கற்றாழையின் உள்ளே உள்ள  ஜெல்லை எடுத்து இளநீரில் போட்டு குடித்தால் குடல் புண் குணமாகும்.

 - பாலாஜி கணேஷ்

சாப்பிட்ட உடன் ஐஸ்வாட்டர்  குடித்தால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் போய் பல கோளாறுகளை  உருவாக்கும்.

- பி.பரத்

உருளைக்கிழங்கின் சாறு வயிறு மற்றும் குடல் நோய்களைக் குணப்படுத்தும்.

முள்ளங்கி இலையை  பொரியல் செய்து உண்டால் நீரிழிவு கட்டுப்படும்.

‘ஆரோக்கியம் தரும் காய் மருத்துவம்' நூலிலிருந்து  - நெ.இராமன்

அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்க நுரையுடன் (சோப்பு நுரை) கூடிய கிளீனிங் பவுடரால் தேய்த்த பிறகு பாத்திரங்களை வெயிலில் காய வைத்தால் நாற்றம் நீங்கிவிடும்.

கத்தரிக்காயை ஹாட்பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல் நன்றாகவும் நிறம் மாறாமலும் இருக்கும்.

மழை நீரில் அரிசியை வேகவைத்தால் சாதம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்

வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். 

ஊறுகாய் கெடாமல் இருக்க சிறிது எண்ணெயை சூடாக்கி ஊறுகாய் மேல் ஊற்ற வேண்டும். பிறகு பாருங்கள் ஊறுகாய் கெடாமல் நீண்ட நாள் வரும்.

பாகற்காயில் இருக்கும் கசப்பை போக்க வேண்டுமானால் காயுடன் உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டிய பிறகு பொரியல் செய்தால் கசப்பு நீங்கிவிடும்.

பருப்புடன் சிறிது எண்ணெய்யும் சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

வீட்டில் ரசம் வைத்த பிறகு அதில் அரை ஸ்பூன் சர்க்கரை கலந்தால் ரசம் சுவையாக இருக்கும்.

மிளகு, பொரிகடலை, சின்ன வெங்காயம், முள்ளங்கி, புதினா, மல்லித்தழை ஆகியவற்றை பச்சையாக மென்று சாப்பிட்டால் ஜலதோஷமும், மூக்கில் நீர் வருவதும் கட்டுப்படும்.

பப்பாளி இலைகளை அரைத்து சாறெடுத்து படர்தாமரையுள்ள  இடத்தில் காலையும் மாலையும் ஒரு வாரம் தடவினால் படர்தாமரை  மறையும்.
 - என்.கே.மூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com