அக்ரூட் பருப்புகளை முழுதாக உடைப்பது எப்படி?

அக்ரூட் பருப்புகளை முழுதாக உடைப்பது எப்படி?

வாழைக்காயைத் தண்ணீரில் போட்டு வைத்தால் சில நாட்கள் பழுக்காமல் இருக்கும்
  • வாழைக்காயைத் தண்ணீரில் போட்டு வைத்தால் சில நாட்கள் பழுக்காமல் இருக்கும். தண்ணீரை தினசரி மாற்றிவிட வேண்டும்.
  • வாழைக்காய்,  வாழைத்தண்டு, கத்தரிக்காய் ஆகியவற்றை சிறிது மோர் கலந்த நீரில் நறுக்கிப் போட்டால் கறுக்காமல் இருக்கும்.
  • முட்டைக்கோஸ், குடைமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடிச் சேர்த்துக்கொள்வது எடை குறைக்க உதவும்.
  • அக்ரூட் பருப்புகளை முழுதாக  உடைத்தெடுக்க அவற்றை ஓட்டுடன் சிறிது நேரம் வெந்நீரில்  ஊற விட்டு பிறகு  உடைத்து எடுக்கவும்.
  • பூரிக்கு மாவு பிசையும் போது  அதில் சிறிது சீரகத்தைச் சேர்க்கவும். பூரி வித்தியாசமாக சுவையில் சூப்பராக இருக்கும்.
  • வெங்காயத்தை வதக்கும் போது  சிறிது உப்புச் சேர்த்தால் நன்கு சிவந்து வதங்கும்.
  • நூடுல்ஸ் வேக வைக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு விட்டால், நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் டேஸ்ட்டாக இருக்கும்.
  • சமோசா செய்ய பயன்படுத்தும் மைதா மாவை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டி இட்லித் தட்டில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும். அதன் பிறகு  உப்பு சேர்த்துப் பிசைந்து சமோசா செய்தால் சூப்பராக இருக்கும்.
  • தட்டை ரிப்பன் பகோடா செய்யும்போது சிறிது ஓமத்தையும் பொடித்துச் சேர்க்கவும். வாசனையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகவும் ஓமம் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com