கொடூரமாக தாக்கும் வெயில் உங்களை அல்லும் பகலும் வாட்டுகிறதா? இதோ தப்பிக்க சில எளிய வழிமுறைகள்!

கொடூரமாக தாக்கும் வெயில் உங்களை அல்லும் பகலும் வாட்டுகிறதா? இதோ தப்பிக்க சில எளிய வழிமுறைகள்!

நீண்ட பகல்களும், வெப்பமான இரவுகளும் அதிகரித்துவிட்ட கோடை காலம் இந்த வருடமும் வாட்டத் தொடங்கிவிட்டது.

நீண்ட பகல்களும், வெப்பமான இரவுகளும் அதிகரித்துவிட்ட கோடை காலம் இந்த வருடமும் வாட்டத் தொடங்கிவிட்டது. வெயில் காலம் வந்துவிட்டால் பலருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். பருவ நிலை மாற்றங்கள் குணங்களில் சில மாறுதல்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாது. ஆனால் எல்லா காலங்களிலும் கூலாக இருப்பவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதா? காரணம் அவர்கள் எந்த நிலையிலும் தங்கள் மன நிலை மற்றும் உடல் நிலையில் அக்கறை கொள்பவராக இருப்பார்கள். நாமும் சில விஷயங்களில் கவனமாக இருந்தால், என்ன கொடுமை இது என்று சொல்வதற்குப் பதிலாக ஆஹா வெயில் என்று சொல்லலாம். வெயில் காலத்தில் உணவில் அதிகப்படியான காரம், கரம் மசாலா சேர்க்க கூடாது. அசைவ உணவுகளை குறைத்தும் சாப்பிடுவது நல்லது. தினமும் ஒருவகை கீரை, தர்பூசணி, நுங்கு, வெள்ளரி பிஞ்சு, தக்காளி, வாழைத்தண்டு, வெங்காயம், திராட்சை, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிட்டால் உடலின் வெப்பம்  குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.

  • வெயிலில் பயணம் செய்ய நேரிடும் போது கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது நல்லது. மேலும் நாக்கு வரண்டு போகாமல் இருக்க அரை நெல்லிக்காயை வாயில் போட்டு மெல்லலாம். 
  • நீங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்ளும் அளவை விட கொஞ்சம் அதிகமாக உப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • சாதம் வடித்த கஞ்சியை நன்றாக ஆற வைத்தபின் அதில் கால் பங்கு மோர் விட்டு கரைக்கவும். சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் குடித்தால் உடலுக்கு தெம்பும் குளிர்ச்சியும் ஏற்படும்.
  • வெயிலுக்கு மிகவும் ஏற்றது நன்னாரி சர்பத். வீட்டிலேயே தயாரித்து குடித்தால் பலன்கள் அதிகம்.
  • எலுமிச்சைச் சாறில் சர்க்கரையைவிட உப்பு சேர்த்து குடியுங்கள்.
  • பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
  • முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் மோர் வெயிலுக்கு மிகவும் உகந்தது. மோரில் வெள்ளரிக்காய் அல்லது நெல்லிக்காய் சிறிது துருவிப் போட்டு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி அதனுடன் சேர்த்து தாளித்து குடித்தால் அதிக ருசியாக இருக்கும்.
  • இளநீரில் சிறிதளவு க்ளூகோஸ் போட்டுக் குடித்துப் பாருங்கள் சுவை அபாரமாக இருக்கும். இளநீரில் பனம் நுங்குகளை போட்டும் குடிக்கலாம்.
  • வெள்ளரி சாலட், தக்காளி சூப், நீர்க் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட கூட்டு, எலுமிச்சை ரசம் ஆகியவை வெயில் கால ரெசிபிகள். தினமும் இதில் ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கோடையை சமாளித்துவிடலாம்.
  • மொட்டை மாடியில் மாலை வேளையில் இரண்டு முறையாவது தண்ணீர் தெளித்து வையுங்கள். இரவில் சூடு அதிகளவில் இறங்காமல் இருக்கும்.
  • வெளியில் போகும் போது பருத்தியிலான உடைகளை அணிந்து செல்லுங்கள். தொப்பி அல்லது காட்டன் துணியால் தலையை போர்த்தலாம். தேவைப்படுவர்கள் குடை எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் அதிக நகைகள் போடாதீர்கள். சூரியக் கதிர்களிலிருந்து கண்களை பாதுகாக்க கூலர்ஸ் அணியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com