கட்டை விரலில் மோதிரம் அணிந்து கொள்வது சரியா தவறா?

பிறர் கண்கள் உறுத்தும் அளவுக்கு சிலர் கைகளில் மோதிரங்களை மாட்டி இருப்பார்கள்.
கட்டை விரலில் மோதிரம் அணிந்து கொள்வது சரியா தவறா?

பிறர் கண்கள் உறுத்தும் அளவுக்கு சிலர் கைகளில் மோதிரங்களை மாட்டி இருப்பார்கள். ஒவ்வொரு விரலில் இரண்டு அல்லது மூன்று மோதிரங்கள் அணிந்திருக்கும் மோதிர பிரியர்களையும் காணலாம். சிலர் புதனுக்கு எனவும், சனிக்கு எனவும், ஒவ்வொரு விரலிலும் அவருக்கு தோஷமான கிரகங்களுக்கு உகந்த கல் மோதிரத்தை அணிந்திருப்பார்கள். சிலர் தங்க, வெள்ளி, வைடூரிய, ப்ளாட்டின மெட்டல்களில் பிடித்த டிசைன்களின் கையை மினி மோதிரக் கடையாக மாற்றியிருப்பார்கள்.

அவரவர் வசதியும், விருப்பமும் சார்ந்த விஷயம் இதுவென்றால் இந்த மோதிரப் பிரியர்கள் கட்டை விரலைக் கூட விட்டுவைப்பதில்லை. கட்டை விரலில் மோதிரம் அணியக் கூடாது என்று வீட்டுப் பெரியவர்கள் சொன்னாலும் அலட்சியப்படுத்திவிடுவார்கள். ஆனால் உண்மையில் கட்டை விரலில் மோதிரம் அணியலாமா கூடாதா என்ற கேள்வி பல காலமாக கேட்கப்படுகிறது.

கட்டை விரல் நீர்க் கடவுளான நெப்ட்யூனைக் குறிக்கும். உங்கள் கட்டை விரலை வைத்து உங்கள் குணத்தை சொல்லிவிடலாம். கட்டை விரல் சரியான வளைவுடன் நேராக இருந்தால் நீங்கள் நேர்மையானவர் என்று அர்த்தம். ஆனால் அதிகப்படியாக வளைந்து இருந்தால் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்குமாம்.

பழங்காலத்தில் வில்-அம்பு பயிற்சி செய்பவர்கள் கட்டை விரலில் மோதிரம் அணிந்திருப்பார்கள். கட்டை விரலில் மோதிரம் அணிந்த வில்லாளர்களை பெருமையாக பார்த்தது பண்டைய பாரதம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல.

மற்ற விரல்களிலிருந்து தனித்து இருப்பதால், கட்டை விரலுக்கென ஒரு தனித்துவம் உண்டு. ஆனால் கட்டை விரலில் மோதிரம் அணிவது அரிதான பழக்கம். அப்படி அபூர்வமான ஒரு பழக்கத்தை உடையவர்கள் வித்யாசமான குணநலன்களுடன் இருப்பார்கள். உறுதியும் கற்பனை வளமும் மிகுந்தவர்களாக அவர்கள் கருதப்படுகிறார்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஃபேஷன் துறையில் உள்ளவர்கள், புதுமை விரும்பிகள் உள்ளிட்ட சிலர் இப்பழக்கத்தை உடை 

கட்டை விரலில் மோதிரம் அணிந்தால், அது எதிர்மறை அலைகளை ஏற்படுத்தி தீய சக்திகளையும் நம்மை நோக்கி ஈர்த்துவிடும். எளிதில் கையாள முடியாத குறிப்பிட்ட விதமான சக்திகளை அணிந்தவரை நோக்கி திருப்பி விடும் என்கிறார்கள் சிலர்.

கட்டை விரலில் மோதிரம் தேவையா இல்லையா என நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com