இன்று புத்த பூர்ணிமா... புத்தரின் பொன்மொழிகளில் சில உங்களுக்காக...

இன்று புத்த பூர்ணிமா... புத்தரின் பொன்மொழிகளில் சில உங்களுக்காக...

இன்று புத்த பூர்ணிமா. புத்தம் இவ்வுலகில் அவதரித்த திருநாள். இன்றைய நேபாள எல்லையில் அன்றைய இந்துஸ்தானத்தில் கபிலவஸ்துவில் சாக்கிய குல மன்னரான சுத்தோதனருக்கும், அரசி மாயாதேவிக்கும் மகனாக புத்தர் அவதரித்

இன்று புத்த பூர்ணிமா. புத்தம் இவ்வுலகில் அவதரித்த திருநாள். இன்றைய நேபாள எல்லையில் அன்றைய இந்துஸ்தானத்தில் கபிலவஸ்துவில் சாக்கிய குல மன்னரான சுத்தோதனருக்கும், அரசி மாயாதேவிக்கும் மகனாக புத்தர் அவதரித்தார். அவர் பிறக்கும் போது அவரது ஜாதகத்தைக் கணித்த அரண்மனை சோதிடர்கள் இக்குழந்தையின் லக்ன ரேகைகள் இகபர வாழ்வை வெறுத்து துறவில் இன்பம் காணத்தக்க வகையில் அமைந்திருந்தமையை சுட்டிக்காட்ட பிறந்தது முதல் தனது திருமணக்காலம் வரையிலும் புத்தரை வெளிஉலகம் காணாது அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்த்தனர் அவரது பெற்றோர். ஆயினும் விதி வலியது. மனைவி யசோதராவும் மகன் ராகுலனும் அரண்மனை உப்பரிகையினுள் ஆழ்ந்துறங்கும் வேளையொன்றில் மூப்பு, பிணி, இறப்பு எனும் மூவகை வாழ்வியல் நிதர்சனங்களையும் ஒரு சேர இளவரசன் சித்தார்த்தன் காண நேர அவர் தம் மனைவிக்கும், குழந்தைக்கும், பெற்றோருக்கும் கூட எவ்வித அறிவிப்புமின்றி அரண்மனையை விட்டு நீங்குகிறார். அன்றுமுதல் அவர் கபிலவஸ்துவின் அரசனல்ல ஆயினும் காணும் எவருக்கும் ஆன்மீக அரசராகும் நற்பேறு பெற்றார். ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பது புத்தரின் கொள்கை அடிப்படை. அந்த ஆசையை புறக்கணித்ததோடு தன்னைப் போன்றே இந்த உலகமும் உய்யவேண்டுமென்று கால்நடையாக நடந்தும், உஞ்சவிருத்து செய்து உண்டும், உலக மக்களுக்கு ஆசையினால் விளையும் துன்பங்களைப் பற்றியும் மனிதன் எவ்விதம் வாழ்ந்தால் அவனுக்கு இவ்வுலகில் நன்மை பயக்குமென்றும் புத்தர் பல்வேறு விதமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் இவ்வுகல மக்களுக்கு விட்டுக் சென்றிருக்கிறார்.

அவற்றுள் சிலவற்றைப் பற்றி புத்தர் பிறந்தநாளான இன்று நாமும் அறிந்து கொள்வோம்.

  1. மனிதனின் நாக்கு கூர்மையான கத்தி போன்றது. ரத்தமே இல்லாமல் கொல்லும் அளவுக்கு மோசமானது அதன் கூர்மை. (The Tongue is like a sharp knife, It Kills without drawing blood.)
  2. தீய செயல்களை அறவே புறக்கணிக்க வேண்டும். வாழ்வின் மீது பற்றுள்ள மனிதன் விஷத்தை எப்படி வெறுத்து ஒதுக்குவானோ அந்த அளவுக்கு தீய செயல்களை ஒரு மனிதன் வெறுத்து ஒதுக்கி புறக்கணிக்க வேண்டும். (Avoid Evil Deeds, As a man who loves life avoids poison.)
  3. கோபத்தை மனதுக்குள் பதுக்கி வைப்பதென்பது மனிதர்கள் தாம் விஷமருந்தி விட்டு அதற்காக அடுத்தவர்கள் சாகக் காத்திருப்பதைப் போன்று அர்த்தமற்ற செயல். (Holding on to anger is like drinking poison and expecting the person to die.)
  4. மனநிறைவே மாபெரும் செல்வமாம். (Contentment is the greatest wealth.)
  5. ஆழமான ஏரி தெளிவாகவும், அசைவற்றும் இருப்பதைப்போல, அறிவுடையோர் போதனைகளைக் கேட்கும் போது முற்றாக அமைதியடைகிறார்கள். (Just as a deep lake is clear and still, even so the wise become utterly peaceful when they hear the teachings.)
  6. தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள் குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள் தாயன்பைப் போல எல்லையிலா அன்பை உலகில் தோன்றிய உயிரினத்தின் மீது காட்டுங்கள். (Just as a mother protects her only child even at the risk of her own life, so too, one should have immeasurable love to all beings in the world.)
  7. நால்வகையான மக்கள் உலகில் உளர். எந்த நான்கு? தன்னுடைய நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்கறை இல்லாதவர்; மற்றவர் நலத்தில் அக்கறை கொண்டு தன் நலத்தில் அக்கறை இல்லாதவர்; தன் நலத்தில் அக்கறை கொண்டு மற்றவர் நலத்தில் அக்கறை இல்லாதவர்; தன் நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்றை உள்ளவர். இந்த நான்கு வகை மக்களுள் தன் நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்கறை உள்ளவரே முதல்வர், மேலோங்கியவர், உச்சத்தில் இருப்பவர், தலை சிறந்தவர். (There are four types of people found in the world. What four? Those concerned with neither their own welfare nor the welfare of others, those concerned with the welfare of others but not their own, those concerned with their own welfare but not that of others, and those who are concerned with both their own welfare and the welfare of others…Of these four types of people those who are concerned with their own welfare and the welfare of others are the chief, the highest, the topmost and the best.)

புத்தரின் பொன்மொழிகள் அனைத்தும் இவ்வுலகை உய்விப்பதற்காக அவரால் தன் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்லிச் செல்லப்பட்டவை. அவற்றின் பொருளறிந்து பின்பற்றுபவர்களுக்கு நிச்சயம் நன்மை தரத்தக்கவையும் கூட.

புத்தரின் பொன்மொழிகளில் தலையாயது ‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’ என்பது. மேலே சொல்லப்பட்ட பொன்மொழிகளைக் கடைப்பிடிக்கச் சிரமம் என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் அவரவர் ஆசைகளைத் துறக்கவாவது முயற்சிக்கலாம் :)

Image courtesy: India.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com