ஓ மை காட்! நாங்க தப்பிச்சிட்டோம்: எஸ்கலேட்டரில் இருந்து தப்பிய தந்தை, மகனின் திகைப்பு!

அவர்கள் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தரையில் கால் வைத்த அடுத்த நொடியில் காலடியில் தரை நழுவினாற்போல எஸ்கலேட்டர் அவர்கள் கண்முன்னே அப்படியே நிலைகுலைந்து சரிந்து நொறுங்குகிறது.

ஷாப்பிங் மால் ஒன்றில் தனது சின்னஞ்சிறு மகனுடன் எஸ்கலேட்டரில் ஏறிக் கடக்கிறார் ஒரு தந்தை.  அவர்கள் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தரையில் கால் வைத்த அடுத்த நொடியில் காலடியில் தரை நழுவினாற்போல எஸ்கலேட்டர் அவர்கள் கண்முன்னே அப்படியே நிலைகுலைந்து சரிந்து நொறுங்குகிறது. அச்சத்தில் உறையும் அந்அவர்கள் தத் தந்தையும் மகனும் ஓ மை காட் நாங்க தப்பிச்சிட்டோம் என்று அந்த இடத்தில் இருந்து விரைகிறார்கள். பிறகு நொறுங்கிச் சிதறிய எஸ்கலேட்டரை மாலின் பணியாளர்கள் வந்து பார்வையிடுகிறார்கள். இப்படியொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்டு கருத்து தெரிவிப்பவர்கள், ‘நீங்கள் ஏன் படிகளைப் பயன்படுத்தக் கூடாது?’ என்றும், நல்ல வேளை மிக அருகில் நெருங்கிக் கொண்டிருந்த ஆபத்தில் இருந்து தப்பிய தந்தைக்கும், மகனுக்கும் வாழ்த்துக்கள், என்றும் ஜஸ்ட் மிஸ்டு’ என்றும் கருத்துரையிட்டு தங்களது வியப்பையும் அதிர்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தியாவில் எஸ்கலேட்டர்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்த பின்பும் இப்போதும் அவற்றைப் பயன்படுத்த அச்சம் கொண்டு படிகளையும் லிஃப்டுகளையும் பயன்படுத்துவோர் அதிகம்பேர். இப்படி எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்த அச்சப்படுபவர்களுக்கு எஸ்கலோபோபியா இருப்பதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். எஸ்கலோபோபியா என்றால் எஸ்கலேட்டர்களில் ஏற அச்சப்படுபவர்கள் என்று பொருளாம். இந்த ஃபோபியாவில் இருந்து விடுபட சிகிச்சையெல்லாம் கூற இருக்கிறது என்கிறார்கள். ஆனால், மேலே வீடியோவில் நிகழ்ந்த எஸ்கலேட்டர் விபத்தைப் பார்த்தால் எஸ்கலோபோபியா இருந்தாலும் தேவலாம்... பேசாமல் படிகளில் ஏறியே மாடிகளைக் கடக்கலாம் போலத்தான் இருக்கிறது இல்லையா?

மேற்கண்ட எஸ்கலேட்டர் விபத்து நிகழ்ந்திருப்பது இந்தியாவில் இல்லை. அது நடந்தது சீனாவின் தெற்கு மாகாணமொன்றில்... அங்கே இம்மாதிரியான எஸ்கலேட்டர் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன போலும்! யூடியூபில் அப்படியான விபத்து வீடியோக்கள் நிறைய காணக் கிடைக்கின்றன. பார்க்கவே பயங்கர பீதியாக இருக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com