கலைஞர் ஸ்பெஷல்... டயட் சீக்ரெட்ஸ்!

சாப்பாடு விஷயத்தில் கலைஞர் எப்போதுமே மிகவும் ஸ்ட்ரிக்ட். அவருக்கு வெளியில் ரெஸ்டரெண்டுகளுக்குச் சென்று சாப்பிடுவது என்றால் சுத்தமாகப் பிடிக்காது. குழந்தைகளையும், பேரன், பேத்திகளையும் கூட ஹோட்டலுக்குச்
கலைஞர் ஸ்பெஷல்... டயட் சீக்ரெட்ஸ்!

கலைஞரைப் பற்றிப் பேசும் போது பலருக்கும் அவரது சோர்வில்லாத உற்சாக வாழ்க்கைமுறை பற்றி ஆச்சர்யமாகவே இருக்கும்..

எப்படி முடிகிறது இந்த மனிதரால்?

எப்போதும் இப்படி சுறுசுறுப்பாக இயங்க... என்று  அவரைப் பற்றி அறிய நேர்ந்த எவரும் யோசிப்பார்கள்.

அதில் பெரிய ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை. நான் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கோட்டைப் போட்டுக் கொண்டு அந்த கோட்டுக்குள் தனக்கான அரசியல் பணி, வாசிப்பு, எழுத்துப்பணி, கலை பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள், உறவுகள், தொண்டர் படைகள், டயட் முதற்கொண்டு வாழ்வின் அத்தனை விஷயங்களையும் அடக்கத் தெரிந்திருந்தது கலைஞருக்கு. அவ்வளவு தான்.

ஆனால் அதை எப்படி தான் வாழ்ந்த அத்தனை வருடங்களும் அவர் இடைவிடாமல் கடை பிடித்தார் என்பதில் இருக்கிறது கலைஞர் இத்தனை ஆண்டு சாதனைகளுக்கான மந்திரம்.

முதலில் கலைஞரின் டயட் சீக்ரெட்டுகளைத் தெரிந்து கொள்வோம்...

பிறகு அடுத்தடுத்து அவரது பிற ரசனைகளையும் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.

  • கலைஞர் எத்தனை கஷ்டங்களையும் தாங்கும் விதத்தில் வலிமையான மனம் மட்டும் மல்ல உடல் ஆரோக்யமும் கொண்டவர். அவருக்கு ஆரோக்யம் சார்ந்து எப்போதாவது வரக்கூடிய பிரச்னை என்றால் அது அஜீரணக் கோளாறு தான்.
  • சாப்பாடு விஷயத்தில் கலைஞர் எப்போதுமே மிகவும் ஸ்ட்ரிக்ட். அவருக்கு வெளியில் ரெஸ்டரெண்டுகளுக்குச் சென்று சாப்பிடுவது என்றால் சுத்தமாகப் பிடிக்காது. குழந்தைகளையும், பேரன், பேத்திகளையும் கூட ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது தெரிந்தால் சத்தம் போடுவார். அதனால் அவர் ஊரில் இல்லாத நாட்களாகப் பார்த்து தான் பிள்ளைகள் வெளியில் சென்று சாப்பிடுவது வழக்கம்.
  • வீட்டில் பொங்கல் செய்திருந்தால் விரலால் தொட்டுப் பார்த்து விட்டு விரலில் எண்ணெய் ஒட்டவில்லை என்றால் தான் கொஞ்சமாகச் சாப்பிடுவார். இல்லாவிட்டால் அப்படியே தட்டில் ஒதுக்கி வைத்து விடுவார்.
  • வாரத்தில் 2 நாட்கள் ஆப்பம் செய்யச் சொல்லி சாப்பிடுவார். இட்லிக்கு தேங்காய்ச் சட்னி பிடிக்காது அவருக்கு சாம்பார் இல்லாவிட்டால் வேறு ஏதேனும் தேங்காய் சேர்க்காத சட்னி செய்ய வேண்டும்.
  • 2007 ஆம் வருடத்திற்கு முன்பு வரை 12 மணியானால் ஒரு கப் சிக்கன் சூப் குடிக்கும் வழக்கமிருந்தது. ஆனால் 2007 க்குப் பிறகு ஏனோ காய்கறி சூப்புக்கு மாறி விட்டார்.
  • சூப் சாப்பிடுவதற்கு முன்பு 11 மணி போல சூடாக ஒரு கப் காஃபி அருந்துவார். கோடைகாலமென்றால் காஃபிக்குப் பதிலாக இளநீர் அருந்துவார்.
  • மதிய உணவில் கண்டிப்பாக ஒரு கீரை இருக்க வேண்டும். முள்ளங்கி, கத்தரிக்காயெல்லாம் அவருக்கு ரொம்ப ப்ரியம். ஆனால், அதை பொரித்தோ, வதக்கியோ சமைத்து வைக்கக் கூடாது. குழம்பு வைத்துத் தான் சாப்பிடத் தர வேண்டும். இல்லாவிட்டால் பயங்கரமாகக் கோபப்படுவார்.
  • மாலையானால் ஸ்னாக்ஸ் சாப்பிடும் வழக்கம் கிடையாது. எப்போதாவது தோசை சாப்பிடுவார்... இல்லாவிட்டால் ப்ரெட்டை சூடான டீயில் முக்கிச் சாப்பிடப் பிடிக்கும்.
  • பசி அதிகமாக இருந்தாலோ அல்லது சோர்வாக இருந்தாலோ இடையில் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்வார்.
  • இரவு உணவாக இரண்டே இரண்டு சப்பாத்தியும் குருமாவும் எடுத்துக்கொள்வார்.
  • இரவில் கண்டிப்பாக திராட்சை, சப்போட்டா, பப்பாளிப் பழங்கள் சில துண்டுகள் சாப்பிடுவார்.

அவருடைய உடல்நலத்துக்காக அவர் தொடர்ந்து செய்து வந்த ஒரு விஷயம் நடைபயிற்சி. அறிவாலயம் கட்டியதிலிருந்து தினமும் அங்கே 20 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் அவருக்கு இருந்தது. அது மட்டுமல்ல இரவு பேரக்குழந்தைகளுடன் அரட்டை, எழுத்துப்பணி எல்லாம் முடித்து எத்தனை மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை 5.30 மணிக்கு எழுந்து விடுவார். 

இப்படியெல்லாம் தனக்கென ஒரு கட்டுதிட்டமான உணவுப் பழக்கத்தை வரையறுத்துக் கொண்டு அதிலிருந்து எப்போதும் வழுவாமல் வாழ்ந்ததால் மட்டுமே கலைஞரால் 94 வயது வரை பெரிதாக எந்த ஆரோக்யக் கோளாறுகளும் இன்றி ஊர் மெச்ச உலகு மெச்ச வாழ்ந்து முடிக்க முடிந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com