எவ்வளவு விலையுயர்ந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சீக்கிரமே சார்ஜ் தீர்ந்து விடுகிறதா?

வாரந்தோறும் சந்தைகளில் புதிய ஸ்மார்ட்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆப்களும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
எவ்வளவு விலையுயர்ந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சீக்கிரமே சார்ஜ் தீர்ந்து விடுகிறதா?


வாரந்தோறும் சந்தைகளில் புதிய ஸ்மார்ட்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆப்களும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கின்றன. ஆனால், இவற்றை எல்லாம் இயக்கும் பேட்டரிகளின் சேமிப்பு சக்தி, இந்த அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. முடிவில், எத்தனை ஆயிரம் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போனாக இருந்தாலும் பேட்டரி சார்ஜ் தீர்ந்து முடங்கித்தான் போய்விடுகிறது.

மனிதர்களுக்கு மூன்று வேளை உணவைப் போல், ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை ஒருநாளில்  மூன்று தடவைக்கும் மேலாக சார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு பயன்பாட்டாளர்கள் தள்ளப்படுகிறார்கள். பேட்டரி பயன்பாட்டைக் குறைக்க திரையின் வெளிச்சத்தைக் குறைத்தல், இன்டர்நெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை வழக்கமாக பயன்பாட்டாளர்கள் கடைபிடிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆப்கள் இருந்தும், எதிர்பார்த்த அளவில் பயன் கிடைப்பதில்லை.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய செயலியை (ஆப்) கண்டுபிடித்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷிரசாகர் நாயக் கூறியதாவது:

'இரவு முழுவதும் 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட்டு, வெளியே சென்று ஸ்மார்ட்போனை பகலில் பயன்படுத்தினால் பேட்டரி வேகமாக குறைந்துவிடுகிறது. இதற்கு தேவையில்லாத ஆப்கள் இயங்குவதும் ஒரு காரணம். மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்துவதால், ஸ்மார்ட்போன் சூடாகி விடுகிறது. இதனால் மூன்று ஆண்டுகாலம் ஆயுள் உள்ள பேட்டரியை 2 ஆண்டுகளில் மாற்ற வேண்டியதாகிறது.

இதைத் தடுக்க புதிய செயலி ஒன்றை உருவாக்கி, 200 ஸ்மார்ட்போன்களில் சோதனை செய்து  பார்த்தோம்.  சோதனையின்போது,  அந்த போன்களில் ஏராளமான ஆப்கள் செயல்பாட்டில் வைக்கப்பட்டன. ஆனாலும் இந்த புதிய செயலியின் மூலம் பேட்டரி திறன் 10 முதல் 25 சதவீதம் வரை சேமிப்பில் இருந்தது. இதை வைத்து நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஸ்மார்ட் போனை எந்தவித இடையூறும் இல்லாமல் இயக்கலாம். இந்த புதிய செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் பயன்படுத்தாத செயலிகளின் பக்கத்தின் வெளிச்சம் தானாக குறைந்துவிடும். இந்தச் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com