சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு அடிப்படையில் அரசின் மானிய விலை தேங்காய்!

தேங்காய் விலையதிகரிப்பு விவகாரத்தில் அரசே நேரடியாகத் தலையிட்டு கட்டுப்படுத்தும் என்பதும், குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 ரூபாய் விலையில் தரமான நல்ல தேங்காய் ஒன்று என்ற கணக்கில் மாதம் முழுமைக்கு
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு அடிப்படையில் அரசின் மானிய விலை தேங்காய்!

கேரளாவைப் போலவே கோவாவிலும் தேங்காய் தினசரி சமையலில் இடம்பெறும் ஒரு அத்யாவசியமான உணவுப்பொருள். எனவே கோவா மக்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்களுக்கு மானிய விலையில் தேங்காய் விற்பனை செய்யப்பட வேண்டும் என கோவா விவசாய அமைச்சர் விஜய் சர் தேசாய் இன்று தெரிவித்தார்.

திறந்தவெளிச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வரும் நட்ஸ் எனப்படும் கொட்டைகளின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இப்படி ஒரு அறிவிப்பைச் செய்யவேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். கோவாவில் தேங்காய்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோவா மக்களால் தினமும் தேங்காய்களைப் பயன்படுத்தாமலிருக்க முடியாது. கோவாவில் குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு தேங்காயாவது வேண்டும். அதனால் கோவா அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள கோவா குடிமக்களுக்கு மானியவிலையான ரூ 20 க்கு குறைந்த பட்சம் குடும்பத்துக்கு ஒன்று என ஒரு தேங்காய் வழங்க முடிவெடுக்கலாம். என தான் பங்கேற்றுப் பேசிய குடியரசு தினவிழா மேடையில் அறிவித்தார். 

விழா நடைபெற்ற இடம் மர்கோவா, கோவாவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நகரம் இது. கடந்த சில வாரங்களாக கோவாவில் தேங்காய்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்து என்றுமில்லாத வகையில் 50% உச்ச அதிகரிப்பு விலையைத் தொட்டுள்ளது. நடுத்தரமான அளவுள்ள தேங்காயின் விலையே 40 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

எனவே இது குறித்து தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் கலந்துரையாடியதில், சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் அடிப்படையில் தேங்காய்கள் கோவா மக்களுக்கு மானிய விலையில் கோவா தோட்டக்கலைத்துறையினரால் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரது கூற்றின்படி, இனி தேங்காய் விலையதிகரிப்பு விவகாரத்தில் அரசே நேரடியாகத் தலையிட்டு கட்டுப்படுத்தும் என்பதும், குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 ரூபாய் விலையில் தரமான நல்ல தேங்காய் ஒன்று என்ற கணக்கில் மாதம் முழுமைக்குமாக 30 தேங்காய்களை அரசு மானிய விலையில் விற்பனை செய்யவிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com