செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

12மைல் நீளமுள்ள (20 கிலோமீட்டர்) இந்த ஏரி மார்ஸியன் ஐஸ் என்று சொல்லப்படக்கூடிய செவ்வாய்க்கிரகத்தின் பனிப்பாறைகளுக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

அடுத்த நூற்றாண்டின் துவக்கத்துக்குள் செவ்வாய்கிரகத்தில் குடியேற்றம் நிகழ்த்தப் போவது போன்ற நம்பிக்கைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளின் பின்னிணைப்பாக சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரியொன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்த தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாயில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள பெரிய ஏரி இதுவாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஆராய்ச்சிகள் விரிவடையும் போது தொடர்ந்துஅங்கே இங்கே நீராதாரங்களின் வாயிலாக உயிர்களும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான தடயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்து நடத்தி வரும் சர்வ தேச வானியல் ஆய்வாளர்கள் கடந்த புதனன்றுசெய்தியாளர்களுடனான சந்திப்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

12மைல் நீளமுள்ள (20 கிலோமீட்டர்) இந்த ஏரி மார்ஸியன் ஐஸ் என்று சொல்லப்படக்கூடிய செவ்வாய்க்கிரகத்தின் பனிப்பாறைகளுக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள ஏரிகளில் இதுவே மிகப்பெரிது எனவும் கூறப்படுகிறது.

இம்முறை செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி கண்டு பிடிப்பு எனும் செய்தியானது, இதற்கு முந்தைய வருடங்களில் வெளியிடப்பட்ட செய்திகளைப் போல நிரூபணமாக வலுவற்றதான சந்தேகத்திற்கிடமான செய்தி இல்லை. இம்முறை கண்டறியப்பட்டுள்ள ஏரியில் தண்ணீரானது திரவ நிலையில் இருப்பதால், செவ்வாயில் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைப்பதில் இனி சிக்கலிருக்க முடியாது என நம்புவதாக ஆஸ்திரேலியாவின் ஸ்விர்ன்பர்ன் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ஆலன் டஃபி தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் தற்போது குளிர்ந்த, தரிசுநிலமாகவும், வறண்டும் காணப்படுகிறது ஆனால் வழக்கமாக சூடாகவும், வெதுவெதுப்பாகவும் இருப்பதே அதன் இயல்பு. அதன்காரணமாக பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது மிகப்பெரிய ஏரிகள் மற்றும் ஏராளமான திரவ நீர்நிலைகள் பலவற்றின் ஆதாரமாக இருக்க பெரிதும் வாய்ப்புகள் இருந்திருக்கக் கூடும் என இந்தக் கண்டுபிடிப்பின் வாயிலாக நம்பப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகளின் வாயிலாக செவ்வாயில் அதன் பூர்வ காலங்களில் நீர்நிலைகள் இருந்திருப்பது உண்மையெனில் அதனடிப்படையில் தற்போதும் அங்கு மனிதர்கள் குடியேறப் போதுமான அளவில் திரவ நீராதாரங்கள் இருப்பதை உறுதி செய்ய முயன்று வருகின்றனர் விஞ்ஞானிகள். இதன் மூலமாகப் பல்லாண்டுகளாக வெறும் புதிராக மட்டுமே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ‘செவ்வாயில் குடியேற்றம்’ எனும் கனவை நினைவாக்க முடியுமா? என்பதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கி உண்மையைக் கண்டுணர அவர்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

நீர் ஆதாரங்களை அணுகுவதன் மூலம், பூமியின் அண்டைக் கிரகமான செவ்வாயில் எதிர்காலத்தில் மனிதர்கள் உயிர் வாழத்தோதான அனுகூலங்களை ஆராய்ந்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஏரி நீர், குடிநீராக உபயோகிக்கத் தக்கதாக இல்லாததோடு உறைந்த பனிப்பாலங்களுக்கு அடியில் 1.5 கிலோ மீட்டர் ஆழத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தகவல்.

ஏரி நீரை ஆராய்ந்தால் அதில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான ஆதாரங்களும் விவாதத்திற்குரியவை.

செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை சுத்தமான குடிநீரின் உறைநிலைக்கும் கீழானதாகவே இருக்கிறது. ஆனால், ஏரி நீர் தொடர்ந்து திரவ நிலையில் நீடிப்பதற்கான காரணம் அதில் கரைந்துள்ள மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற உப்புக்களே!

இந்தக் கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் விஞ்ஞானிகள் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்து மடிந்ததற்கான ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

‘இது அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தின் மீது வாழும் உயிரினங்களின் இருப்பைப் பற்றி ஊகிக்கக்கூடியதாக இந்தக் கண்டுபிடிப்பு உள்ளது’ என்று ஆஸ்திரேலிய வானியல் ஆய்வுக்கூடத்தின் ஃபிரெட் வாட்சன் தெரிவித்தார்.

"ஆனால், இந்த ஆய்வில் மிகுந்த எச்சரிக்கை தேவை... ஏனெனில், தண்ணீரை திரவநிலையில் வைத்திருக்கத் தேவையான உப்புகளின் செறிவு பூமியைப் போன்றே அங்கும் கூட நுண்ணுயிர்களின் வாழ்விற்கும ஆபத்து விளைவிக்கக் கூடியதாகவே இருக்கும் என்றும் வாட்சன் கூறினார்.

இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. ஏனெனில், ஏனெனில், திரவ நீரை செவ்வாயின் தென் துருவத்தில் காணலாம் என்றால், அது வேறு இடங்களில் இருக்கலாம்.
எனும் எச்சரிக்கை ஆய்வாளர்களிடம்  எப்போதும் உள்ளது. அதனால் அதற்கான முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com