மொறுமொறு பூரி செய்ய ஆசையா? இதோ டிப்ஸ்

வீட்டில் எறும்புகள் தொல்லை இருந்தால் அதற்கு பெருங்காயத் தூளைத் தூவிவிடவும்.
மொறுமொறு பூரி செய்ய ஆசையா? இதோ டிப்ஸ்

வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் கண்ணாடிகளைத் துடைத்தால் பளிச்சென்றிருக்கும். 

முட்டை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் முன் முட்டைக் கூட்டில் சமையல் எண்ணெய்யைத் தடவி அதில்முட்டைகளை வைத்தால் கெடாது.

சீனி வைத்துள்ள பாட்டில் அல்லது ஜாரில் சிறிது கிராம்புத் துண்டுகளை போட்டு வைத்தால் எறும்பு வராது.

மீன், இறைச்சி ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது கையில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.வாடை அடிக்காது. கையில் பாதிப்பு ஏற்படாது.

பூரி செய்யும்போது மாவுடன் ரவையை வறுத்து சேர்த்து பிசைந்தால் பூரி சுவையுடனும், மொறுமொறுப்புடனும் இருக்கும்.

வீட்டில் எறும்புகள் தொல்லை இருந்தால் அதற்கு பெருங்காயத் தூளைத் தூவிவிடவும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

துணிகளில் எண்ணெய், நீங்காத அழுக்கு இருந்தால் நீலகிரித் தைலத்தை சில சொட்டுகள் விட்டு சோப்பு போட்டு அலசினால் நீங்கும்.

வெள்ளிப் பாத்திரங்களின் பளபளப்பு மாறாமல் இருக்க அவ்வப்போது விபூதியைக் கொண்டு தேய்த்தால் பளபளப்புடன்இருக்கும்.

பூண்டு, வெங்காயம்,மாமிசம் இவற்றை கத்தியால் வெட்டும்போது துர்நாற்றம் வீசும். இதற்கு சிறிதளவு கல் உப்பை பொடித்து கத்தியில் தடவி நீரில் கழுவினால் போதும்.

பழங்களை கடைகளில் இருந்து வாங்கி வரும்போது வீட்டில் அவற்றை சிறிதளவு வினிகர் கலந்த நீரில் போட்டு கழுவி சாப்பிடலாம். கிருமிகள் இருக்காது.

அரிசி, கோதுமை போன்ற தானியங்களை போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் சிறிது வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் தொல்லை இருக்காது.

வாழைத் தண்டை பொடிப் பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டுப் பிசைந்து பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டு கலந்து வடை செய்தால் மொறு மொறுவென சுவை ஆக இருக்கும்.

கத்தரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்க வேண்டும், கத்தரிக்காய் நன்றாக குழையும், ருசியும் கூடும்.

கை வைத்தியம்!

தேங்காயைப் பாலெடுத்து, சிறிது கற்கண்டு சேர்த்து நெய்யில் வறுத்த பெருங்காயம் பொடியும் சேர்த்துப் பருகி வர, மூலத்தினால் உண்டான எரிச்சல் வலி குறையும்.

சேப்பங்கிழங்கை புளி சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மூலம் நீங்கும்.

பிரண்டையை நெய் விட்டு வதக்கி அரைத்து, பாக்களவு, காலை, மாலை சாப்பிட்டு வர, மூலத்தால் உண்டாகும் வலி, குருதிப் போக்கு சரியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com