சேலத்தில் பசுமைவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மும்மடங்கு இழப்பீட்டுத் தொகை: மாவட்ட ஆட்சியர் ரோகிணி!

விவசாயிகளின் நிலத்திற்கு மட்டுமன்றி அவர்களது கிணறு, மாட்டுக்கொட்டகை போன்றவற்றிற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார். நிலம் எந்தப் பகுதியில் உள்ளதோ அதற்கு மும்மடங்கு இழப்பீடு வழங்க உள்ளதாகவும்
சேலத்தில் பசுமைவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மும்மடங்கு இழப்பீட்டுத் தொகை: மாவட்ட ஆட்சியர் ரோகிணி!

சேலத்தில் பசுமை வழிச்சாலை அமைக்கும் விவகாரத்தில், நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு நிலம், கிணறு, ஆகியவற்றுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி விளக்கம் அளித்தார். அப்போது அவர் தெரிவித்த வகையில், விவசாயிகளின் நிலத்திற்கு மட்டுமன்றி அவர்களது கிணறு, மாட்டுக்கொட்டகை போன்றவற்றிற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார். நிலம் எந்தப் பகுதியில் உள்ளதோ அதற்கு மும்மடங்கு இழப்பீடு வழங்க உள்ளதாகவும் அதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தென்னை, பாக்கு, மரங்களும் ஆய்வ்ய் செய்யப்பட்டு அதற்கு ஏற்றாற் போல இழப்பீடு வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் கூற்றுப்படி பசுமை வழிச்சாலைக்காக ஆக்ரமிக்கப்படவிருக்கும் நிலங்களில்... நிலத்திற்காக மட்டுமல்லாமல் அந்த நிலத்திலிருக்கும் கிணறுகள், மாட்டுக் கொட்டகைகள், மரங்களின் வகைகள், உள்ளிட்ட விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல மூன்று மடங்கு அதிகமான இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு ரெவின்யூ இலாகா அதிகாரி மூலமாக வழங்கவிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
 

Video courtesy:Thanthi TV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com