உங்களுக்கு பிஸ்கெட் பிடிக்குமா? ஒரு பிஸ்கெட்டை சாப்பிட்டுக் கொண்டே இதைப் படித்துவிடுங்கள்!

முன்பெல்லாம் விருந்தினர் வீட்டுக்குப் போகும் போது பை நிறைய பழகும், கை நிறைய பிஸ்கெட்டும் வாங்கிச் செல்லும் பழக்கம் பலரிடையே இருந்தது.
உங்களுக்கு பிஸ்கெட் பிடிக்குமா? ஒரு பிஸ்கெட்டை சாப்பிட்டுக் கொண்டே இதைப் படித்துவிடுங்கள்!

முன்பெல்லாம் விருந்தினர் வீட்டுக்குப் போகும் போது பை நிறைய பழகும், கை நிறைய பிஸ்கெட்டும் வாங்கிச் செல்லும் பழக்கம் பலரிடையே இருந்தது. பயணத்தின் போது எடுத்துச் செல்ல, அவசரப் பசிக்கு உதவ என ருசிக்க ரசிக்க பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு மகிழ்வோம். அப்போதெல்லாம் பார்லே, பிரிட்டானியா, மாரி, ஆரஞ்சு க்ரீம் பிஸ்கெட், எலாச்சி, பட்டர் பிஸ்கெட், உப்பு பிஸ்கெட் என ஒருசில வகை பிஸ்கெட்டுக்கள் மட்டுமே கிடைக்கும். அதுவும் தோழிகள் காக்காய் கடி கடித்து தரும் பிஸ்கெட், சாக்லெட் சுவைக்கு ஈடு இணை இந்த ஈரேழு லோகத்திலும் இருக்க வாய்ப்பில்லை. இன்றைய காலகட்டத்தில் விதவிதமான பிஸ்கெட்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. மைதாவில் தயாரிக்கப்பட்டது, ஒபிஸிட்டி பிரச்னையில் தொடங்கி பல காரணங்களால் பிஸ்கெட்டை சிலர் ஒதுக்கி வைத்துவிட்டாலும், பிஸ்கெட் பிரியர்களுக்கு மாலை ஒரு காபி அல்லது டீயுடன் பிஸ்கெட் சாப்பிட்டால் தான் மகிழ்ச்சி. இதோ சில பிஸ்கெட் குறிப்புக்கள்.

டபுள் சாக்லெட் பிஸ்கெட்

சிறு வயதில் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தந்தால் முதலில் நாம் செய்வது இரண்டு பிஸ்கெட்டுகளை பிரித்து நடுவில் இருக்கும் க்ரீமை சாப்பிடுவதுதான் வழக்கம். டபுள் சாக்லெட் பிஸ்கெட்டை டார்க் சாக்லெட், கோகோ முட்டை மற்றும் வெண்ணெய் கலந்து தயாரிப்பதால், இதில் கலோரிகள் அதிகம். சுவையும் சத்தும் நிரம்பிய இந்த பிஸ்கெட் உடல் பலத்துக்கு நல்லது. 

உலர் திராட்சை பிஸ்கெட்

உலர் திராட்சைகள் உடல் சோர்வை நீக்கி உடனடி எனர்ஜி தரும். இதில் ஃபைபர் சத்து அதிகம் உள்ளது. கோதுமைத் தவிடு, ஆளிவிதை, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் மொறு மொறுப்பான இந்த பிஸ்கெட் ஆரோக்கியம் நிரம்பியது. 

கோகனட் குக்கீஸ், ஓட்ஸ் பிஸ்கெட்

கோகனட் குக்கீஸ் என்பது தேங்காய் பிஸ்கெட்தான். இந்த பிஸ்கெட்டில் தேங்காய், வெண்ணெய் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளன ஓட்ஸ் பிஸ்கெட் ஒரு டயட் உணவு. இந்த பிஸ்கெட்டுகளை, பாலுடன் சேர்த்தும் கூட சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு கூடுதலாக கால்ஷியம் ஊட்டச்சத்தும் கிடைக்கும். ஹாட் சாக்லெட்டில் முக்கி சாப்பிடலாம். 

சால்ட் மிளகு பிஸ்கெட்

சர்க்கரை, உப்புச் சுவை மிகுந்த வெண்ணெய், முட்டை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் உப்பு பிஸ்கெட் சாப்பிட சாப்பிட ருசி கூடிக் கொண்டே போகும். போதும் என்று வைக்க முடியாத அளவிற்கு இந்த பிஸ்கெட்டை சாப்பிடுவார்கள் பலர். ஆனால் அதிகளவில் அடிக்கடி சாப்பிடுவதற்கு இது ஏற்ற பிஸ்கெட் அல்ல. 

மல்டி க்ரெய்ன் பிஸ்கெட், ஆல்மெண்ட் பிஸ்கெட், பாதாம் பிஸ்கெட் என இன்னும் பலவகையான பிஸ்கெட்டுகள் உள்ளன. எழுதித் தீராது பிஸ்கெட் புராணம் என்பதால் இதனை அவரவர் சுவைக்கும் ரசனைக்கும் விட்டுவிடலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com