தாய்மையடைவதால் ஒரு பெண் தன் ஆயுட்காலத்தில் 11 ஆண்டுகளை இழக்க நேரிடுமென்கிறது புதிய ஆய்வு!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தாய்மையடைதல் ஒரு பெண்ணின் ஆயுளில் 11 ஆண்டுகளை கபளீகரம் செய்வதாகக் கண்டறிந்துள்ளனர்.
தாய்மையடைவதால் ஒரு பெண் தன் ஆயுட்காலத்தில் 11 ஆண்டுகளை இழக்க நேரிடுமென்கிறது புதிய ஆய்வு!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தாய்மையடைதல் ஒரு பெண்ணின் ஆயுளில் 11 ஆண்டுகளை கபளீகரம் செய்வதாகக் கண்டறிந்துள்ளனர். அதாவது குழந்தை பெற்ற பெண்களின் டெலோமியர்களின் நீளம் குறைவாக இருக்குமாம். டெலோமியர்கள் என்பவை மனித டிஎன் ஏ நீட்சியின் முடிவில் இருக்கும் தொப்பி போன்ற அமைப்புகள். இவை டி என் ஏ பிரதிபலிப்பில் உதவுகின்றன. இந்த டெலோமியர்களின் நீளம் குறையும் போது பெண்ணின் ஆயுளும் குறையுமென்றால் எப்படி என்கிறீர்களா? டெலோமியர்கள் பொதுவாக மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இறப்பு விழுக்காடுகளை நிர்ணயிப்பதில் முக்கிய அம்சங்களாக விளங்குவதாகத் தான் இதுவரை வந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் முதல் முறையாக டெலோமியர்களின் அடிப்படையில் ஒரு பெண்ணின் குழந்தைப் பேற்றைப் பொறுத்து அவளது ஆயுளும் அமையும் என கண்டறியப்பட்டுள்ளது.

மனித இனப்பெருக்கம் தொடர்பான மருத்துவ ஆய்வு இதழ் ஒன்றில், தாய்மைப் பேறடைந்த பெண்களுக்கிடையேயான டெலோமியர் ஆய்வில் அவர்களின் டெலோமியர்களின் நீளம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இது அவர்களின் ஆயுளோடு ஒப்பிடுகையில் அப்பெண்களின் மொத்த ஆயுளில் 11 ஆண்டுகளைக் குறைக்குமாம்.

குழந்தை பேற்றால் டெலோமியர்களின் நீளம் குறைகிறதா அல்லது டெலோமியர்களின் நீளம் குறைவதால் பெண்கள் குழந்தைப் பேறு அடைகிறார்களா? என்பது குறித்து எங்களால் தெளிவாகக் கூற இயலாது என்கிறார் இந்த ஆய்வை நடத்திய ஜார்ஜ் மாசன் பல்கலைக் கழக மருத்துவர்களில் ஒருவரான அன்னா போலக்.

இது டெலோமியர்கள் தொடர்பான ஆய்வின் முதற்படியே... மேலும் விரிவான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மேலுமான ஆய்வுகளின் முடிவைக் கொண்டே ஒரு இறுதி வரையரைக்கு வரமுடியும் எனவும் மருத்துவப் பேராசிரியர்களின் குழு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய ஆய்வை எப்படி எடுத்துக் கொள்வதெனத் தெரியவில்லை.

நமது நவநாகரீக இளம்பெண்களில் பலருக்கு இன்னமும் கூட பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினால் இளமையும், அழகும் தொலைந்து விடும் எனும் மனப்பிரமை உண்டு. அப்படித்தான் பல குழந்தைகள் லாக்டோஜன் பேபிகளாக வலம் வந்தார்கள். இனி இப்படியொரு ஆய்வு முடிவைக் கொண்டு போய் அவர்கள் முன் வைத்தால்... குழந்தைப் பேறடையத் தகுதியுள்ள திருமணமான ஆரோக்யமான  இளம் தாய்மார்கள் கூட ‘விட்டது தொல்லை, இந்த இண்டர்னெட் யுகத்தில் போய் யார் 10 மாதம் குழந்தையைச் சுமந்து பெற்றெடுத்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஒரு வாடகைத் தாயை அமர்த்திக் கொண்டு சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது தான் என முடிவெடுத்து விட்டால் பிறகு உள்ள நன்மையும் போயாச்சு என்றாகி விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com