இதையெல்லாம் செய்யாதீங்க! சமையல் தவறுகள் சில!

சமைப்பது ஒரு அழகான கலை. மனம் உவந்து நம் குடும்பத்துக்கான உணவை சமைத்து பரிமாறுவது
இதையெல்லாம் செய்யாதீங்க! சமையல் தவறுகள் சில!

சமைப்பது ஒரு அழகான கலை. மனம் உவந்து நம் குடும்பத்துக்கான உணவை சமைத்து பரிமாறுவது என்பது ஆத்மார்த்தமான ஒரு செயல். அதனை பெண்களின் பக்கம் ஒதுக்கிவிட்டு ஆண்கள் அதிகாரம் மட்டும் செய்யும் இடத்தில் இருப்பதால்தான் பல குடும்பங்களில் சமையல் ஒரு வேலையாகவும் சுமையாகவும் மாறிவிட்டது. மாறாக ஆண்களும் பெண்களும் இணைந்து சமைப்பதை ஒரு கலையாகவும், குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்வார்கள் எனில் அந்தக் குடும்பம் உண்மையில் மகிழ்ச்சிகரமாக விளங்கும்.

சமையலைப் பொருத்தவரையில் சின்ன சின்ன தவறுகள் கூட ருசியைக் கெடுத்துவிடும். முழு மனதையும் கொண்டு சமைக்கப்படும் உணவே அதி ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று உப்பு புளி மிளகாயை போட்டு வேக வைத்து வறுத்து பொரித்து எடுப்பதன் பெயர் சமையல் ஆகாது. எனவே ஆணோ பெண்ணோ யார் சமைத்தாலும் சரி பின்வரும் விஷயங்களில் கவனமாக இருங்கள். ருசியாக சமைத்துப் பயன் பெறுங்கள்.

  • ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
  • மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
  • கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
  • ஆழமாக வறுத்தல் மற்றும் பலமுறை மீண்டும் அதே எண்ணையை உபயோகிக்கவே கூடாது
  • காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.
  • சூடாக இருக்கும்போது எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.
  • தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
  • பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
  • காய்கறிகள்/பழங்களை சமைப்பதற்கு/சாப்பிடுவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே நறுக்கி வைக்கக் கூடாது
  • பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
  • மைக்ரோவ்வில் சமைக்கும் உணவுகளுக்கு பிளாஸ்டி கொள்கலன்களை பயன்படுத்தக் கூடாது
  • தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • குலாப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
  • குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்துமல்லி இலையைப் போடக் கூடாது.

இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. சமைக்கும் போது அது பற்றிய நுண்ணுணர்வு இயல்பாக வந்துவிடும். எனவே அக்கறை மட்டுமே சமைப்பதில் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில் அம்மா கை சாப்பாடு ஏன் ருசியாக இருக்கிறது என்பதன் ரகசியம் இதுவே.

டிப்ஸ் - காஞ்சனா இராசகோபாலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com