ஒரு மைக்ரோ கதை படிங்க!

திடீரென விழிப்பு வந்ததும் அலறியடித்துக் கொண்டு எழுந்தான் குமார். 'அடடா... மணி எட்டாயிருச்சே
ஒரு மைக்ரோ கதை படிங்க!

திடீரென விழிப்பு வந்ததும் அலறியடித்துக் கொண்டு எழுந்தான் குமார். 'அடடா... மணி எட்டாயிருச்சே... ஒன்பது மணிக்கு ஆபிஸ்ல இருக்கணும். நல்லா தூங்கிட்டேனே. வொய்ஃப் வீட்டில இருந்தா அவ எழுப்பிவிட்டுடுவா. அவதான் ஊருக்குப் போயி நாலு நாள் ஆச்சே' என சலிப்புடன் நினைத்தவன், அவசர அவசரமாகக் குளித்து, ஆடை அணிந்து கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.

எதிர்ப்பட்ட நண்பன் கிருஷ்ணன், 'என்ன குமாரு... காலையிலே இவ்வளவு அவசரமா கிளம்பிப் போற?' என்று கேட்டான்.

'உனக்குப் பதில் சொல்ல எனக்கு இப்ப டைம் இல்லை. அவசரமா ஆபிசுக்குப் போய்க்கிட்டிருக்கேன். அப்புறமா பேசிக்கலாம்' என்று வேகமாக நடந்தான்.

'இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. ஆபிசுக்குப் போறேங்கிற?' என்று கேட்டான் கிருஷ்ணன்.

மனைவியை உடனே வீட்டுக்கு வரச் சொல்ல வேண்டும் என்று நினைத்து போனை ஆன் பண்ணினான் குமார்.
இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com