கண்ணாடிப் பாத்திரங்களில் சிறு கீறல் விழுந்தால் என்ன செய்யலாம்?

டைனிங் ரூமில் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி புதினா இலைகளைப் போட்டு வைத்தால் ஈ தொல்லை இருக்காது
கண்ணாடிப் பாத்திரங்களில் சிறு கீறல் விழுந்தால் என்ன செய்யலாம்?

டைனிங் ரூமில் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி புதினா இலைகளைப் போட்டு வைத்தால் ஈ தொல்லை இருக்காது.

உருளைக் கிழங்கை வெங்காயத்துடன் கலந்து கூடையில் வைத்தால் பத்து நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.

காய்ச்சின பாலோடு சிறிது பச்சைப் பாலை சேர்த்து உறை ஊற்றி வைத்தால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.

வெள்ளைத் துணிகள் பளிச்சிட வெள்ளைத் துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக்கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்து விட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னிஷ் செய்தது போல இருக்கும்.

பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

பூரி மாவை அப்பளமிட்டு பிரிட்ஜில் வைத்து பிறகு பொரித்தால் போட்டவுடன் பொரியும். எண்ணெய் குடிக்காது.

தயிரைக் கடைந்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து மறுபடி கடைந்தால் வெண்ணெய் சீக்கிரமாக திரண்டு வரும்.

கண்ணாடிப் பாத்திரங்களில் சிறு கீறல் விழுந்தால் அந்த இடத்தில் டூத் பேஸ்ட்டைத் தேய்த்தால் கீறல் மறைந்து விடும்.

ஆடையில் சுவிங்கம் ஒட்டிக்கொண்டால் ஐஸ் கட்டியை அந்த இடத்தில் சற்று தேய்த்துப் பார்த்தால் எளிதில் வந்துவிடும்

பட்டுப்புடவை, பட்டுச் சட்டை முதலியவற்றை வாசனை சோப்பு போட்டுத்தான் துவைக்க வேண்டும். ஏனெனில் அதில்தான் காரத் தன்மை குறைவு. பட்டுத்துணிகளுக்கு சேதம் வராது.

(முத்துக் குவியல் -என்ற நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com