உங்களுக்கு ஏற்பட்டிருக்கா ‘சில்லுன்னு’ இப்படி ஒரு அனுபவம்?! பிடிங்க அதைக் கடந்து வர எளிய டிப்ஸ்!

கடைகளில் வாங்குவதை விட நாமே பின்னிக் கொள்ளும் போது நமக்குப் பிடித்த நிறங்களில் பிடித்த டிஸைன்களில் அழகழகான டிஸைனர் நோஸ் வார்மர்களை உருவாக்கலாம்.
உங்களுக்கு ஏற்பட்டிருக்கா ‘சில்லுன்னு’ இப்படி ஒரு அனுபவம்?! பிடிங்க அதைக் கடந்து வர எளிய டிப்ஸ்!

முகநூலில் தோழி ஒருவர் ‘Nose Warmer' குறித்துப் பகிர்ந்திருந்தார். அடடே! என்று ஆச்சர்யமாக இருந்தது. இப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாமல் சில்லிடும் மூக்குடன் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் இல்லையா நம்மில் பலரும். அவர்களுக்கெல்லாம் உதவும் பொருட்டு இதை அறிமுகப்படுத்துகிறோம். 

சிலருக்கு மழை, குளிர் என்று சீதோஷ்ண நிலையில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் போதும் உடனடியாக மூக்கு சில்லிட்டுப் போகும். உடலில் வேறெந்தப் பாகமும் குளிர்கிறதோ இல்லையோ... மூக்கு மாத்திரம் தொட்டால் காஷ்மீர் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது போல சில்லிட்டுப் போயிருக்கும். அவர்கள் காரிலோ, AC பஸ்ஸிலோ பயணிக்கையில் மூக்கை உறிஞ்சிக் கொண்டே வருவார்கள், பிறகு உள்ளங்கையால் மூக்கின் நுனியை அழுத்தித் தேய்த்து விட்டுக் கொண்டே இருந்தாலன்றி அந்த சில்லிடல் மாறவே மாறாது. கடைசியில் இது கடுமையான சளித்தொல்லை அல்லது காய்ச்சலில் கொண்டு விடும். சரி இந்த நிலையை தவிர்ப்பது எப்படி என்கிறீர்களா? கூகுளில் தேடினால் அழகழகான நோஸ் வார்மர்கள் கிடைக்கின்றன. பார்க்க ஸ்கார்ஃப் போலவே இருக்கிறது. ஸ்கார்ஃப் பின்னுவதில் ஆர்வம் இருப்பவர்கள் கூகுளில் ஆர்டர் செய்யாமல் தாங்களே உல்லன் நூல் வாங்கி தங்களுக்கென எக்ஸ்க்ளூஸிவ்வாக இப்படி ஒரு நோஸ் வார்மரை பின்னி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பிறந்தநாள், நட்பு நாள் என்று இதையே பரிசாகவும் அளிக்கலாம். அத்தனை பயனுள்ளதாக இருக்கக் கூடும் இந்த நோஸ் வார்மர்கள்.

கடைகளில் வாங்குவதை விட நாமே பின்னிக் கொள்ளும் போது நமக்குப் பிடித்த நிறங்களில் பிடித்த டிஸைன்களில் அழகழகான டிஸைனர் நோஸ் வார்மர்களை உருவாக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com