அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸின் நீலநிற பைஜாமாவின் பின் ஒளிந்திருக்கும் காருண்யம்!

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தைகள் கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அமேசான் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸின் நீலநிற பைஜாமாவின் பின் ஒளிந்திருக்கும் காருண்யம்!

அமேசான் அதிபர் ஜெஃப் பெஜோஸ் தனது நிறுவனத்தின் போர்டு மீட்டிங்குக்கு பைஜாமா அணிந்து சென்றது இந்த வார இணைய வைரலாகியிருக்கிறது. ஒரு அயல்நாட்டுக்காரர் இந்திய உடையான பைஜாமா அணிவதற்கான அவசியம் என்ன வந்தது? நிறுவனத்தின் போர்டு மீட்டிங்கில் கலந்து கொண்ட பிற உயரதிகாரிகளும், நிர்வாகிகளும் ஃபார்மல் உடைகளில் இருக்க... ஜெஃப் மட்டும் ஏன் பைஜாமா அணிந்து கலந்து கொண்டார் என்று நெட்டிஸன்கள் பேசித் தீர்க்க... தனது நீலநிற பைஜாமாவுக்கான காரணத்தை அடுத்த 10 மணி நேரங்களில் தனது இன்ஸ்டாகிராமில் ஜெஃப் வெளிப்படுத்தினார்.

உலகெங்கும் குழந்தைகளைத் தாக்கக் கூடிய சைல்ட்குட் கேன்சருக்கு( குழந்தைப் பருவ கேன்சர்) எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்த நீல நிற பைஜாமா அணிந்து தான் மீட்டிங்கில் கலந்து கொண்டதாகப் புகைப்படத்துடன் விளக்கியிருக்கிறார் ஜெஃப்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தைகள் கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அமேசான் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கன் சைல்ட்குட் கேன்சர் ஆர்கனைசேஷனுடன் இணைந்து இம்மாதிரியான விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுப்பது உண்டு. ஏனெனில் தற்போது அமெரிக்காவில் 4 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கிடையிலான மரணங்களில் இரண்டாவது பெரும் காரணமாகத் திகழ்வது கேன்சர் என்பதால் அதற்கு எதிரான விழிப்புணர்வைத் தூண்டுவதில் அமேசான் இணைந்து செயல்பட விரும்பியதின் விளைவாக இப்படி ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாக ஜெஃப் தெரிவித்தார்.

நீலநிற பைஜாமாவைத் தொடர்ந்து அடுத்தபடியாக சர்வ தேச அளவில் குழந்தைகளைத் தாக்கக் கூடிய சைல்ட்குட் கேன்சருக்கு எதிராக ‘கோ கோல்டு பாக்ஸஸ்’ என்றொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தவிருக்கிறதாம் அமேசான்.

சர்வ தேச அளவில் குழந்தைப் பருவ கேன்சருக்கான அடையாளமாக சித்தரிக்கப்படுவது இந்த தங்க ரிப்பன் அடையாளம் தான். எனவே அமேசான் தனது நிறுவனப் பொருட்களுக்கான பாக்ஸுகளின் மேல் புறத்தில் இந்த தங்க ரிப்பன் லட்சினைகளை இட்டு பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி சர்வதேச அளவில் குழந்தைப் பருவ கேன்சர் நோயுடன் போராடும் குழந்தைகளின் நலனுக்காக செலவளிக்கப்படும் என ஜெஃப் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com