உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற இதை உடனடியாக முயற்சி செய்யுங்கள்!

மோர்க்  குழம்பில் பூசணி, சுரை, வெண்டை  போன்ற  காய்கள் ஏதாவது ஒன்றை சேர்த்து செய்தால் மோர்க் குழம்பு  கூடுதல்  ருசியாக இருக்கும்.
உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற இதை உடனடியாக முயற்சி செய்யுங்கள்!

மோர்க்  குழம்பில் பூசணி, சுரை, வெண்டை போன்ற காய்கள் ஏதாவது ஒன்றை சேர்த்து செய்தால் மோர்க் குழம்பு  கூடுதல்  ருசியாக இருக்கும்.

சர்க்கரைப் பாகில் சிறிது பால் விட்டால்  கசடுகள் மேலே தேங்கும்.  அவற்றை ஒரு கரண்டியால் எடுத்து விட்டால்  கூடுதல் சுவையாக இருக்கும். அது போன்று வெல்லப்பாகில் எலுமிச்சை சாறு ஒரு துளி விட்டு வடிக்கட்டினால் கசடுகள் வந்துவிடும்.

புளிக்கரைசலில் உப்புக் கலந்து தேய்க்கப் பித்தளை - செம்பு  பாத்திரம் பளபளக்கும். நல்லத் தண்ணீரில் கழுவித் துடைக்க வேண்டும்.

ரவா கேசரியில், ஊறவைத்த ஜவ்வரிசி (அ) வறுத்த சேமியா கலந்தால் பார்க்க அழகாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.

மாதுளைச் சாறு, காய்ச்சி ஆறிய பால், பனங்கற்கண்டுடன் பருகினால் பானம் சுவை கூடுவதுடன்  எலும்பு, நரம்பு, பற்கள் பலப்படும்.  இரும்புச்சத்து கூடிடும்.

எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சிச் சாறு இவற்றுடன் மிளகுத் தூள் ஒரு சிட்டிகை, நாட்டுச் சர்க்கரை  சேர்த்துப் பருகிட  உடல் அசதி  நீங்கும். ஜீரணசக்தி,   புது ரத்தம்  ஊறும். உடல் நிறங்கூடும்.  

துவரம் பருப்பு,  மிளகாய் வற்றல், பூண்டுப் பற்கள்  தனித்தனியே வறுத்து, சிறிது உப்பு சேர்த்து  துவையலாக அரைத்து  காரக் குழம்பு சாதத்துடன்  சேர்த்து சாப்பிட்டால் சுவை  கூடுதலாக இருக்கும்.

எலுமிச்சை, பூண்டுச்சாறு அல்லது துளசிச்சாறு தடவ முகப் பரு சரியாகி, வடுமறைந்து முகம் அழகாகும்.

உலையிலிட்ட அரிசி கொதி வரும் நுரையோடு  கூடிய நீரை ஒரு டம்ளர் எடுங்கள். அதில் பனங்கற்கண்டு, வெண்ணெய் சேர்த்துப் பருகிட உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். வயிற்று சம்பந்தபட்ட நோய் விலகும். உடல் சூடும் குறையும். 

பிஞ்சு முருங்கை, அவரை, நாட்டுக் கத்திரிக்காய், சுரை, சௌசௌ, முள்ளங்கி, வெள்ளை வெங்காயம், கோஸ்  இவற்றையெல்லாம் அடிக்கடி உணவில்  சேர்க்க நோய் எதிர்ப்பு சக்தி கிட்டும். நினநீரோட்டம் சீராகும். உடல் சூடு சமநிலையில் இருக்கும். கீரைகளும் நல்லது. ஆரோக்யம் கூட்டும். தோல்  சுருக்கம் ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com