பால் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளை பால் அருந்த வைக்க இதை ட்ரை பண்ணுங்க!

மணத்தக்காளி கீரையை வதக்கி பருப்போடு மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து
பால் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளை பால் அருந்த வைக்க இதை ட்ரை பண்ணுங்க!

மணத்தக்காளி கீரையை வதக்கி பருப்போடு மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தோசைமாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை வார்த்து பாருங்கள். தோசையின் மணம் ஊரையே கூட்டும். மிகவும் சுவையாக இருக்கும்.

சிலர் அவல் உப்புமா என்றால் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் கொத்துமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்து தயிரில் கலந்து அவலையும் போட்டு கிளறினால் தயிர் அவல் ரெடியாகிவிடும். இது ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும். 

ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் அடுப்பில் வைத்து காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றிப் பிறகு மாவைக் கரைத்து பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.

தோசை நன்றாக மெல்லியதாக வரவேண்டும் என்றால் சிறிதளவு அரிசியுடன் சிறிது ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று சுவையான மெல்லியதான தோசை வரும்.

உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க, வடைக்கு அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசிமாவைக் கலந்து வடை தட்டினால் மொறு மொறுவவென்று சூப்பராய் வரும். எண்ணெய்யும் குடிக்காது.

இரவு நேரங்களில் சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட்டால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது. இதை தடுக்க மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்க்க வேண்டும்.

புதிய பாத்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை பிய்த்து எடுத்தாலும் அந்த பசை பாத்திரத்தை விட்டு பல நாட்களுக்கு போகாது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய, அந்த ஸ்டிக்கர்களின் மீது சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெய்யின் இரண்டு சொட்டை விட்டு அதை விரலால் தேய்த்தால் ஸ்டிக்கரும் பசையும் பாத்திரத்தை விட்டு சுத்தமாக அகன்று விடும்.

பன்னீர் பட்டர் மசாலா வீட்டில் செய்யும் போது இஞ்சி வெங்காய விழுதை நன்கு வதக்கி பின்னர் கெட்டியாக முந்திரி கசகசா ஒரு ஸ்பூன் தேங்காய் விழுது சேர்த்து அரைத்து விட்டால் சுவையும் மணமும் ஹோட்டலை தோற்கடிக்கும்.

பால் வேண்டாம் என அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதே பாலில் இரண்டு ஸ்பூன் ப்ருட் ஜாமைப் போட்டுக்கலக்கி ப்ருட்டி மில்க் ஷேக்காகக் கொடுத்து ஜமாயுங்கள்.

மோர்குழம்பு செய்யும் போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துக் கொண்டால் சூப்பர் ருசிதான்.

தோசைக்கல்லில் தோசை வார்க்க வராமல் இருந்தால் வெண்டைக்காயை தடவி தோசை வார்த்தால் தோசை நன்றாக வரும்.

வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல், பாயசம் போன்றவற்றிற்கு வெல்லத்தைக் கொஞ்சம் குறைத்துப் போட்டு கடைசியில் சர்க்கரையைக் கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.

வாழைத் தண்டை பொடிப் பொடியாய் நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டு பிசைந்து பக்கோடா செய்தால் வெங்காயத்திற்கும் வாழைத்தண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - நூலிலிருந்து
- சி.பன்னீர்செல்வம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com