பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

'பால்' சைவமா... அசைவமா... என்று வாதிப்பவர்கள் இருக்கிறார்கள். 'சைவப் பால்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

'பால்' சைவமா... அசைவமா... என்று வாதிப்பவர்கள் இருக்கிறார்கள். 'சைவப் பால்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? 'குட்மில்க்' (Goodmylk) என்ற பெயரில் பெங்களூருவில் விற்கப்படும் பால், பதாம் பருப்பிலிருந்தும், தேங்காயிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பவர் ATV ரங்கன் என்னும் இருபத்தொரு வயது இளைஞர். அவர் கூறியதாவது:

'இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று பதினெட்டு வயதில் தீர்மானித்தேன். நாம் எப்போதும் பயன்படுத்தும் மாட்டுப் பால் உற்பத்திக்கு ஆகும் செலவைவிட இந்த சைவப்பால் தயாரிக்க செலவு அதிகமாகும் என்பதைத் தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நாங்கள் தயாரிக்கும் தேங்காய்ப் பாலைக் கொண்டு காபி, தேநீர் தயாரிக்கலாம். உலகிலேயே சில நாட்கள் வரை கெடாத 'சைவ யோகார்ட்'டையும் நான் தயாரிக்கிறேன். லஸ்ஸி தயாரிக்க இது உதவும். இந்த தயாரிப்புகளில் உதவியும் ஒத்துழைப்பும் தருபவர் எனது அம்மா வீணா. அம்மா பொறியியல் பட்டதாரி. 

2013-இல் தொடங்கிய இந்த நிறுவனத்தை நானும் அம்மாவும் இணைந்து நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில், நாங்கள் தயாரிக்கும் பால் நுகர்வோரை அடையும் முன் கெட்டுப் போகும். தயாரிப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். தற்சமயம் குளிரூட்டும் பெட்டியில் வைக்காமல் ஒரு மாதம் வரை எங்கள் பால் கெடாமல் இருக்கும். பால் குப்பியைத் திறந்து விட்டால் மிச்சம் உள்ள பாலை குளிரூட்டும் பெட்டியில் வைக்கவேண்டும். 

பாலுக்காக பால் பண்ணைகளில் பசு, எருமைகளை மிகவும் துன்புறுத்துகிறார்கள். அதை பார்த்த பிறகுதான் முழுக்க முழுக்க 'வேகன்' என்னும் முழுசைவம் ஆனேன். தவிர, மிருகங்களின் உரிமை குறித்தும் விழிப்புணர்வினை எனது தொண்டு நிறுவனம் மூலம் பரப்பி வருகிறேன். எங்கள் பால் ஆன்லைன்னில் விற்பனைக்கு கிடைக்கும். பெங்களூரில் இந்தப் பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதர நகரங்களிலிருந்து எங்களுக்கு ஆர்டர்கள் ஆன்லைன் மூலம் வருகின்றன' என்கிறார் ரங்கன்.
- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com