வீடற்றவர்களின் குரலாக ஒலிக்க விரும்புகிறேன்: சிதார் கலைஞர் அனோஷ்கா ரவி ஷங்கர்!

அனோஷ்காவின் இந்தியச் சுற்றுபயணத்தின் பிரதான காரணம் அவரது ஆல்பமாக இருந்தாலும் கூட தனது இந்தியப் பயணத்துக்கான கான்செப்டாக அனோஷ்கா கூறுவது ’வீடற்ற மக்களின் குரலாக மாற விரும்பும் நோக்கம்’ தானாம்.
வீடற்றவர்களின் குரலாக ஒலிக்க விரும்புகிறேன்: சிதார் கலைஞர் அனோஷ்கா ரவி ஷங்கர்!

அனோஷ்கா ரவி ஷங்கரை நினைவிருக்கிறதா? இந்தியாவின் பிரபல சிதார் கலைஞர் பண்டிட் ரவிஷங்கரின் இந்திய மகள். அப்பாவைப் போலவே மகளும் திறமையான சிதார் கலைஞர். அறிமுகமான ஆரம்ப நாட்களிலேயே பல கிராமி அவார்டுகளை வென்று தன் அப்பாவின் பெயரைக் காப்பாற்றிய அனோஷ்கா தற்போது வெளிவரவிருக்கும் தனது புதிய ஆல்பமான “லேண்ட் ஆஃப் கோல்டு” க்காக வரும் டிசம்பரில் இந்தியா வரவிருக்கிறர். தனது இந்தப் பயணத்தில் அனோஷ்கா ஆறு பிரதான இந்திய நகரங்களில் பயணம் செய்யவிருக்கிறார் என்பதால் அவரது இந்தியச் சுற்றுப்பயணத்தை ’ஆறு நகரங்களுக்கான இந்தியச் சுற்றுப் பயணம்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
 
அந்த ஆறு பிரதான இந்திய நகரங்கள் நம்ம சென்னையும் ஒன்று என்றால் அது நமக்குப் பெருமை தானே! சென்னை, மும்பை, புனே, பெங்கலூரு, ஹைதராபாத், புது டெல்லி உல்ளிட்ட ஆறு நகரங்களில் அனோஷ்கா சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறாராம்.

அனோஷ்காவின் இந்தியச் சுற்றுபயணத்தின் பிரதான காரணம் அவரது ஆல்பமாக இருந்தாலும் கூட தனது இந்தியப் பயணத்துக்கான கான்செப்டாக அனோஷ்கா கூறுவது ’வீடற்ற மக்களின் குரலாக மாற விரும்பும் நோக்கம்’ தானாம். உலகம் முழுக்க ஏன் இந்தியாவிலும் கூட அரசியல் காரணங்களுக்காகவும், அயல்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார நோக்கத்திற்காகவும் நாடு முழுதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் பல தலைமுறைகள் தாம் உயிரோடும், உணர்வுகளோடும்  ஒன்றிப் போய் வாழ்ந்த வாழ்வாதாரங்களை இழக்க நேரிடுகிறது. அரசால் அபகரிக்கப்பட்ட தமது அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக எதிர்புக் குரல் எழுப்பும் உரிமை கூட அந்த மக்களுக்கு மறுக்கப் படுகிறது. அவர்களின் குரலற்ற குரலாக ஒலிக்கவும் இந்த இந்தியப் பயணத்தை தான் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அனோஷ்கா ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இப்படியெல்லாம் சொல்வதால் நான் இந்த உலகத்தையே மாற்ற வந்திருப்பதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள். எனக்கு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். அதில் நான் எக்ஸ்பர்ட்டாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தவறுகளைக் காண நேரும் போது அவற்றை சுட்டிக்காட்டும் உரிமை நிச்சயம் எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன் என அனோஷ்கா தெரிவித்துள்ளார்.

அனோஷ்காவின் “லேண்ட் ஆஃப் கோல்டு” சிதார் இசைப் பதிவை கேட்க விரும்புவோர் மேலே உள்ள யூ டியூப் வீடியோவைக் கிளிக்கிப் பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com