படிப்பது பள்ளியில் கற்றுக்கொள்வதோ கல்லூரியில்!: எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர்  லலிதா பாலகிருஷ்ணன் 

வெளிநாடுகளுக்கு போனபோது அவர்கள், அவங்க நாட்டு பண்டைய வரலாறை, தலைவர்களை பொக்கிஷமா நினைக்கிறாங்க. ஆனா நாம அப்படியில்லை. நம்ம வரலாறை ஸ்டூடன்ட்ஸ் தெரிஞ்சுக்கணும்.
படிப்பது பள்ளியில் கற்றுக்கொள்வதோ கல்லூரியில்!: எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர்  லலிதா பாலகிருஷ்ணன் 

வெள்ளிவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி.  கல்லூரி முன்னேற்றம் குறித்து, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன்.

"இப்பொழுது எம்.ஓ.பி. வைஷ்ணவாவோட 25 ஆவது வருட விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நாங்க நிறைய கமிட்டிகளில் இருந்து ஒவ்வொண்ணா சாதிச்சுட்டு வர்றோம். நிறைய விழாக்களும் நடத்துகிறோம். கல்சுரல்ஸ், ஃபெஸ்டிவல்ஸ் நடத்தறப்ப கல்லூரியே கோலாகலமாக இருக்கும். 10, 12 டிபார்ட்மெண்ட்தான் இருக்கும். ஆனா அந்த ஒவ்வொரு பிரிவிலேயும் நாங்க நல்ல ஸ்ட்ராங்கா இருக்கோம். குறிப்பா, லைட் மியூசிக்ன்னு வைச்சுக்கங்க, அதுல வெற்றி அடைஞ்சுடணும்றதுதான் குறிக்கோள்!

மாணவிகளுக்கு படிப்பு மட்டும் இல்லாம, இதுக்கு அப்புறமா அவங்க என்ன செய்யப் போறாங்க? அவங்களுக்கான வேலை வாய்ப்பு, அல்லது தொழில் முனைவோராக தங்களை அடுத்த நிலைக்கு கொண்டு போகும் வாய்ப்புகளையும் நாங்க ஏற்படுத்தறோம். அதோட, மாணவிகளுக்கான "கிளப்'பும் கொண்டு வந்திருக்கோம். முதல், இரண்டாம், மூன்றாம் வருஷம்ன்னு மாணவிகள் பிரிஞ்சிருந்தாலும் அவங்கள எல்லாரையும் ஒரே இடத்துல கொண்டு வரணும்ன்னு எனக்கு ஆசை! இந்த கிளப்புக்கு "மனோரஞ்சன்'னு பேர். மொத்தம் 28 கிளப்ஸ் இருக்கு. எல்லாமே என்டர்டெயின்மெண்ட். எதைச் செய்தாலும் சந்தோஷமா செய்யணும்.

ஒரு பிளவுஸ் தைக்கனும்ன்னாகூட அதுக்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கு. அதுக்கு ஃபேஷன் டிசைனிங் கிளப்ஸ், ஃபேஷன் நகைகள் பண்றதுன்னு கிளப்ஸ் இருக்கு. இது எல்லாம் எங்க மேனேஜ்மென்ட் சப்போர்ட்டோட நடக்குது. ஸ்டூடன்ட்ஸ் ஒரு பைசாவும் செலவழிக்க வேண்டியதில்லை. இந்த கிளப்புக்கு வர்றதுக்கு மதிப்பெண்ணோ அல்லது அட்டன்டென்ஸ் போடறதெல்லாம் கிடையாது. மாணவிகள் அவங்களை உணர்ந்து அவங்க திறமையை உயர்த்திக்கணும் அவ்வளவுதான். இதனால் கிளாûஸ மிஸ் பண்ண வேண்டியதில்லை. இங்கு வரக்கூடிய நேரத்திற்கான பாடத்தை சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்திடுவோம்.

எம்.ஓ.பியோட 25 ஆவது வருஷம்கிறதால, பெண்கல்விக்கான ஓட்டத்துக்கு நடிகர் விஷால் எல்லாம் வந்து பெரிய அளவுல நடத்தினோம். எங்க மாணவிகள் மூவாயிரத்து ஐநூறு பேர் மற்ற கல்லூரி ஸ்டூடன்ட்ஸ் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்துகிட்டு மாராத்தான் ஓடினாங்க. 

இப்ப நிறைய திட்டங்கள் வைச்சிருக்கோம். சயின்ஸ், சோஷியாலஜி... இப்படி அத்தனை பிரிவு மாணவிகளும் ஒருமுகமாக ஒரே இடத்தில ஒண்ணா கலந்துக்கணும்ங்கறதுக்காக அசெம்ப்ளி நடத்துவோம். அதில நான் குட்டிக்குட்டி கதைகள் நிறைய சொல்வேன். அதற்காக நாங்க இன்டர்நெட்லேர்ந்து நிறைய கதைகள் எடுக்கறோம். தினமணியில வரும் நிறைய குட்டிக் கதைகளையும் கூட எடுத்துக்கறோம். அவை அவர்களுக்கான மோட்டிவேஷன் கதைகள். அதோட, வேல்யூ எஜுகேஷன், மார்க் மட்டுமே முக்கியம்ன்னு இல்லாம மற்றவைகளையும் தெரியணும்''. 

"இப்ப ஸ்டூடன்ட்ஸ் எந்த அளவுக்கு ஸ்பீடா படிக்கிறாங்களோ.. அதே அளவுக்கு சீக்கிரமா மறந்துடறாங்க. முன்பெல்லாம் அப்படியில்லை, இன்னைக்கும் பல வருடங்களுக்கு முன்னால் படித்த படிப்பு அப்படியே ஞாபகத்தில் இருக்கு. அது படிப்பு சொல்லிக் கொடுத்த முறையா? கற்றுக்கொண்டதான்னு தெரியலை. இன்னொரு விஷயம், எலக்ட்ரானிக்ஸ் பற்றிய அறிவு இப்ப இருக்கிற ஸ்டூடன்ட்ஸ்கிட்ட அதிகமாக இருக்கு. எதையும் ஆராய்ந்து கடைசி வரைக்கும் போய் தெரிஞ்சுக்கிற ஆர்வம், வேகம்.. இதெல்லாம் விரும்பக்கூடிய அம்சங்கள். 
புதுசா கல்லூரியில் சேர்வதற்காக வரும் மாணவிகளிடம் நாங்க கேள்வி கேட்பதுங்கறது ஒருமுறை. இருந்தாலும் அவர்களது கேள்விகள் எங்களை ஆச்சரியப்படுத்தும். "மேடம் நான் பி.காம் படிக்க விரும்பறேன். இதுக்கப்பறம் என்ன படிக்கலாம்? அதனால் என்ன வேல்யூ இருக்கு'' இப்படி நிறைய கேள்வி கேட்பாங்க. தைரியமா தங்களோட விருப்பத்தை சொல்வது, எதையும் முழுமையா தெரிஞ்சுக்க விரும்பறது இதையெல்லாம் வரவேற்கலாம். அதனால், கல்வியைப் பொருத்தவரைக்கும் அவர்களுக்கு மார்க் என்ற அடிப்படையில் இல்லாமல் முழுமையாக புரிஞ்சு படிக்கும்படியா இருக்கணும். குறிப்பாக, சில கதைகள் அல்லது வேறு ஏதோ ஒன்றைப் பற்றி விளக்கும்போது, சொல்லக்கூடிய உதாரணங்கள், அவர்கள் அங்கு போய்ட்டு வந்தது போன்ற அனுபவித்தல் உணர்வு ஏற்படணும். அப்போதான் எத்தனை காலம் ஆனாலும் மறக்காது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். 

சமுதாயத்தில் நல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டு வரணும்ன்னா, முக்கியமா, ஸ்டூடன்ஸ் "நான் நேர்மையா நடந்துக்குவேன். ஒழுக்கம், நன்றியுணர்வோட இருப்பேன்'னு தங்களுக்குள்ளாகவே சொல்லிக்கணும். படிக்கிறது ஸ்கூல்ல தான், காலேஜுக்கு கத்துக்க வந்திருக்கோம். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் இங்க தெரிஞ்சுக்கணும். கல்லூரிங்கறது டிகிரி வாங்கறதுக்காக மட்டும் இல்லை. மற்றவங்களோட பழக தெரிஞ்சுக்கணும். வெளியில போனா நாம் எப்படி நடந்துக்கணும், நாளைக்கு நம்ம காலில் நாம நிக்க தெரிஞ்சிக்கணும். தைரியம் வேணும். 

கல்லூரியை சரியா நிலைநிறுத்தறது ஒரு முக்கியமான விஷயம். அதை அடுத்த நிலைக்கு கொண்டு போறது அதை விட முக்கியமான விஷயம், மேலே போனதும் அந்த நிலையை தக்கவைச்சுக்கறதும் இன்னும் மேல் நிலைக்கு கொண்டு போறதும் மிகவும் முக்கியமானவை. இந்த கல்லூரியின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பது சந்தோஷமானதுதான். இது எல்லாருமாக இணைந்து செய்யும் டீம் ஒர்க்தான். எல்லாமே ஒரே குரலா இருக்கணும்ன்னுதான் விரும்புகிறோம்.

வெளிநாடுகளுக்கு போனபோது அவர்கள், அவங்க நாட்டு பண்டைய வரலாறை, தலைவர்களை பொக்கிஷமா நினைக்கிறாங்க. ஆனா நாம அப்படியில்லை. நம்ம வரலாறை ஸ்டூடன்ட்ஸ் தெரிஞ்சுக்கணும். மாணவிகளின் ஒரு பிரிவு மூலமா இந்த மொத்தமுமான நம் வரலாறை ஒரு புராஜக்ட் மாதிரி செய்ய வைச்சு, கண்காட்சி வைக்க எண்ணியிருக்கோம். சிந்துவெளி நாகரிகத்திலிருந்து இன்றுவரைக்குமான நம்ம வரலாறை மாணவிகள் தெரிஞ்சுக்கணும். நாங்க, மாணவிகளின் அம்மாக்களையும் கல்லூரிக்கு வரச்சொல்லி அவங்களுக்கும் ஒர்க்ஷாப் நடத்தறோம். தங்கள் மகள்களுக்கு எப்படி அட்வைஸ் பண்ணலாம்ங்கிற மாதிரி சில விஷயங்களைச் சொல்லித் தர்றோம். குறிப்பா, தம் பெண் கிட்ட, "யாருக்கு மெசேஜ் பண்றே? என்ன மெúஸஜ்?'' அப்படி இப்படின்னு கேட்பதே சரியா இருக்காது. அவங்ககிட்ட எப்படி பேசலாம்? எந்த விஷயத்தை எப்படி சொல்லித் தருவது? என்பது போன்று ஒர்க்ஷாப் நடக்கும். இப்படி அப்பாக்களையும் கூப்பிட்டு ஒர்க்ஷாப் நடத்துங்க என்கிறார்கள்'' மலர்ச்சியுடன் சிரிக்கிறார் லலிதா பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com