சம்பாதிக்கும் தம்பதியினருக்கான வருமான வரிச் சலுகை சேமிப்பு வழிமுறைகள்!

PPF மூலமாகக் கிடைக்கும் வட்டி விகிதத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பதால் நீங்கள் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களாவீர்கள். வரிச்சலுகை பெற இப்படியும் ஒரு வாய்ப்பு உண்டு.
சம்பாதிக்கும் தம்பதியினருக்கான வருமான வரிச் சலுகை சேமிப்பு வழிமுறைகள்!

தம்பதிகளில் இருவரும் சம்பாதிப்பவர்களாக இருந்து ஒருவரை விட மற்றவர் குறைவான வரிச் சலுகை கொண்டவராக இருக்கும் பட்சத்தில் குறைவான சம்பளம் கொண்டவருக்கான வருமான வரிச் சேமிப்பு சலுகையால் இருவருமே பயனடைய வழி இருக்கிறதாம்.
உதாரணத்திற்கு; 
உங்களுடைய வருடாந்திர வருமானம் 3 லட்சமாகவும் உங்களுடைய மனைவியுடைய வருடாந்திர வருமானம் 5.5 லட்சமாகவும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF)  50,000 ரூபாயை முதலீடு செய்து மொத்த வருமானத்திலிருந்து வருமான வரிச் சலுகை பெற விண்ணப்பிக்க முடியும். அதே நேரத்தில் உங்களது கணவர் ஊழியர் சேம லாப நிதியின் (EPF) மூலமாக வருமான வரிச்சலுகை பெறுபவராக இருந்து தற்போது மேற்கொண்டு வருமானவரிச் சலுகை பெறுவதற்காக எந்த வகையிலும் கூடுதலாக முதலீடு செய்ய முடியாதவராக இருப்பின் அவர் உங்களது மனைவி எனும் உரிமையில் உங்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மூலமாக கிடைக்கக் கூடிய வருமான வரிச் சலுகையைப் பயன்படுத்தி வருமான வரிச்சேமிப்பு செய்ய முடியும். இந்த வழிமுறையின் மூலம் அதிக அளவிலான முதலீடு தம்பதியினரிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதாக கணக்குக் காட்டப்படும் என்பதால் இது ஒரு கவலையற்ற நடைமுறையாகக் கணக்கிடப்ப்படுகிறது.

PPF  முதலீட்டு முறையில் வருமான வரிச்சலுகை பெறும் வழிமுறை:
 

வருமான வரிச்சலுகை பெற்றுத் தரக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள் ஆனால் இன்னமும் உங்களுக்கு வரிச்சலுகை பெறும் தேவைஒ இருக்கிறது எனில் மனைவி அல்லது குழந்தைகள் பெயரில் பொது வருங்கால வைப்பு நிதியில் நீங்கள் முதலீடு செய்யலாம். இதன் மூலமாக உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கப் போவதில்லை என்றாலும் PPF மூலமாகக் கிடைக்கும் வட்டி விகிதத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பதால் நீங்கள் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களாவீர்கள். வரிச்சலுகை பெற இப்படியும் ஒரு வாய்ப்பு உண்டு.

வீட்டுக்கடனை ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் பெறுவதன் மூலமும் வரிச்சலுகை பெறலாம்:

வீட்டுக்கடனை கணவன் மனைவி இருவருக்குமான ஜாயிண்ட் அக்கவுண்ட் கணக்கில் வாங்க முயற்சிக்கலாம். ஏனெனில் வீட்டுக்கடனை பகிர்ந்து கொண்டால் அதற்கான வரிச்சலுகைகலையும் 50:50 கணக்கில் பகிர்ந்து கொண்டதாகவே கணக்கிடப்படுகிறது. எனவே சொந்த வீடு வாங்கும் கனவில் இருக்கும் தம்பதிகள் ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

LTA  கணக்கு காட்டி வருமான வரிச்சலுகை பெறும் முறை:

இப்போது அனைத்துப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுமே தங்களது ஊழியர்களுக்காக வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர பயண விடுப்பு படி வழங்குகிறது. அதாவது LTA (leave travelling allowance). தம்பதிகள் இருவருமே சம்பாதிக்கக் கூடியவர்களாக இருப்பின் வருடம் ஒரு முறை தலா ஒருவர் இந்த LTA வை கணக்கு காட்டி வருமான வரிச்சலுகை பெறலாம் என்றொரு விதி இருக்கிறதாம்.

இந்து கூட்டுக் குடும்ப அடிப்படையில் சொத்துக்களை பதிவு செய்து சம்பளம் அல்லாத வருவாய்க்கு வரிச்சலுகை பெறலாம்:

திருமணமான நபர்கள் இந்து கூட்டுக்குடும்ப அடிப்படையில் தாங்கள் வாங்கும் சொத்துக்களை பதிவு செய்து பராமரித்து வந்தால் அதன்மூலமும் வருமான வரிச்சலுகை பெற முடியும் என்பது விதி. தனி நபர் சொத்துக்களுக்கு இருக்கக் கூடிய அதே விதமான வருமான வரிச்சலுகை இந்து கூட்டுக் குடும்ப அடிப்படையிலான சொத்துக்களுக்கும் உண்டு.

உதாரணத்திற்கு; உங்களது வருட வருமானம் 10 லட்சத்தோடு வருடந்தோறும் 3 லட்ச ரூபாய் வருமானம் அசையாச் சொத்துக்களுக்கான வாடகை மூலம் உங்களுக்கு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்போது நீங்கள் வரி கட்ட வேண்டிய வருமானத் தொகை 10.5 லட்சம். இதில் 2.5 லட்சம் வரை நீங்கள் வருமான வரி விலக்கு பெறுவீர்கள். அதே சமயம் சொத்துக்களை பதிவு செய்யும் விசயத்தில் நீங்கள் HUF இந்து கூட்டுக்குடும்ப அடிப்படை முறையைப் பயன்படுத்தினால் 3 லட்சம் வாடகை வருமானத்திற்கு 50, 000 ரூபாய்களுக்கு மட்டுமே வரி கட்டினால் போதுமாம். அந்த வகையில் இம்முறையில் நீங்கள் வருமான வரி கட்ட வேண்டிய தொகை 8 லட்சமாகக் குறைந்து விடுகிறது.

மேலே சொன்னவை எல்லாம் திருமணமான தம்பதிகள் வரிச்சலுகை பெறுவதற்கான சில எளிய வழிமுறைகள். தம்பதிகள் இருவருமே சம்பாதிக்கக் கூடியவர்கள் எனும் பட்சத்தில் வருமான வரிச்சலுகை மூலம் சேமிக்க வழி உண்டா? என்று வருடா வருடம் தவறாமல் ஆராய்ச்சியில் இறங்குவது உத்தமம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com