பொருளாதாரத்தில் சிறந்தும், குழந்தைகளின் நலனில் மோசமாகவும் உள்ள நாடுகளின் பட்டியல்: யுனிசெஃப் அறிக்கை!

ஒவ்வொரு ஆண்டும் பணக்கார நாடுகள் தங்களது நாட்டு குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றும் விசயத்தில் எவ்விதம் சிறந்து விளங்குகின்றன என்பதைக் கண்காணித்து UNICEF நிறுவனம் ஒரு தகவல் அறிக்கை
பொருளாதாரத்தில் சிறந்தும், குழந்தைகளின் நலனில் மோசமாகவும் உள்ள நாடுகளின் பட்டியல்: யுனிசெஃப் அறிக்கை!

ஒவ்வொரு ஆண்டும் பணக்கார நாடுகள் தங்களது நாட்டு குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றும் விசயத்தில் எவ்விதம் சிறந்து விளங்குகின்றன என்பதைக் கண்காணித்து UNICEF நிறுவனம் ஒரு தகவல் அறிக்கையைத் தயாரித்து உலகிற்கு அறிவிக்கும். அந்த அறிக்கையின் படி உலக நாடுகளில் எவையெல்லாம் தனது நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி இன்மை, குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களில் தன்னிறைவு அடைந்து விளங்கின்றனவோ, அத்தகைய நாடுகள் அனைத்தும் குழந்தைகளின் தேவைகளை உணர்ந்த நாடுகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனடிப்படையில் தரம் வரிசைப் படுத்தப் படுகின்றன. அந்த வகையில் தனது நாட்டு குழந்தைகளின் பால் அதிக கவனமும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளும் நாடுகளின் தர வரிசையைப் பாருங்கள். இதில் முதலிடத்தைப் பெறும் நாடு நார்வே.

நார்வேயைத் தொடர்ந்து ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன. இந்த தர வரிசைப் பட்டியலில் என்ன ஒரு சோகமென்றால் யூனிசெஃப் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மருந்துக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எதையும் காணோம். அப்படியானால் நமது ஆசியக் குழந்தைகளைப் பொறுத்த வரை இன்று வரையிலும் அவர்களது தேவைகள் எதுவும் சரி வர கவனிக்கப் படவில்லை என்பது நிஜமென்றாகிறது. ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளைப் பொறுத்தவரை மத்திய ஆசிய நாடான ‘துருக்கி’’. மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளான ‘ஜப்பான்’, ‘கொரியா’ உள்ளிட்டவை மட்டுமே இதில் இடம் பெற்றுள்ள ஆசிய நாடுகள் என திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியது தான். ஏனெனில் தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட நாடுகளாகப் பிற ஆசிய நாடுகள் இல்லை என்பதே இந்த தரவரிசைப் பட்டியலின் பொருள். 

1. நார்வே


2.ஜெர்மனி


3. டென்மார்க்


4.ஸ்வீடன்


5.ஃபின்லாந்து


6.ஐஸ்லாந்து


7.சுவிட்சர்லாந்து


8.கொரியா குடியரசு


9.ஸ்லோவேனியா


10.நெதர்லாந்து

11.அயர்லாந்து

12.ஜப்பான்

13.யூ.கே


14.லக்ஸம்பர்க்


15.ஆஸ்திரியா

16.ஸ்பெயின்

17.இஸ்டோனியா

18.போர்ச்சுகல்

19.ஃப்ரான்ஸ்

20.செக் குடியரசு

21.ஆஸ்திரேலியா

22.குரேஷியா

23.போலந்து 

24.இத்தாலி

25.கனடா

26.பெல்ஜியம்

27.சைப்ரஸ்

28.லாட்வியா

29.மால்டா

30.ஸ்லோவோக்கியா

31.கிரீஸ்

32.ஹங்கேரி

33.லித்தூனியா

34.நியூசிலாந்து

35.இஸ்ரேல்

36.துருக்கி

37.யுனைடேட் ஸ்டேட்ஸ்

38.மெக்ஸிகோ

39.ரோமானியா

40.பல்கேரியா

41.சிலி
 

Image courtsy: yahoo& google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com