ஒய் நாட் ஒயின்? இப்படி கேட்பவர் நீங்கள் என்றால் உங்களுக்கானதுதான் இது!

சமீபத்தில் ஒரு அலுவலக பார்ட்டியில் ஆண்களை விட பெண்களே மது அருந்துவதில்
ஒய் நாட் ஒயின்? இப்படி கேட்பவர் நீங்கள் என்றால் உங்களுக்கானதுதான் இது!

சமீபத்தில் ஒரு அலுவலக பார்ட்டியில் ஆண்களை விட பெண்களே மது அருந்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். சரியா தவறா என்பதை தாண்டி பெண்கள் மது அருந்தும் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருப்பது உண்மை. இதற்கான காரணம் பொருளாதார சுதந்திரத்தில் ஆரம்பித்து போலி பெண்ணியம் வரை நீளும். பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிராக இயங்குவது என நினைத்து சில பெண்கள் சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் சகஜமாகி வருகிறது. அதை பெண்ணியம் என்று சொல்வது முட்டாள்தனமானது. போலவே ஆண்கள் இவற்றை எல்லாம் செய்யலாம் ஆனால் ஒரு பெண் என்பதால் மட்டும் அவள் அவற்றைச் செய்கிறாள் என்று கூறுவதும் சரியல்ல. பெண் ஆனாலும் சரி ஆண் என்றாலும் சரி தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறவர்கள் யாராக இருந்தாலும் அது கண்டனத்துக்கு உரியதே.

பெண்களில் சிலர் தாங்கள் அளவோடு மட்டுமே குடிப்பதாக கூறுகிறார்கள். வீட்டில் கணவன் மனைவி இருவரும் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் கணவர் ஹாட் ட்ரிங்க்ஸும் மனைவி ஒயினும் பருகும் பழக்கம் இன்று நடைமுறையில் உள்ளது. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்கும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் ஒயின் அருந்துகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லிட்டர் ஆகும். அளவுக்கு மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து சேரும். வழக்கமாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒயின் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை. ஒயின் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பலன்கள் மற்ற உணவு வகைளிலிருந்து பெறுவதே உடல் மற்றும் மன நலத்துக்கு நல்லது. பெண்கள் இந்த மூன்று ஒயின்களைத் தான் விரும்பி அருந்துகிறார்களாம்.

ரெட் ஒயின்

ஒரு கிளாஸில் இந்த ஒயினை ஊற்றி, அது காற்றுடன் கலப்பதற்கு காத்திருந்தபின், முழுமையான ஃப்ளேவர் வெளிவரும். அதன் பின் அறை வெப்பநிலையைவிட சற்றுக் குறைந்த வெப்ப நிலையில் அல்லது 15 டிகிர் செ வெப்பநிலையில் அகலமான சிறிய க்ளாஸில் இந்த ஒயினை குடிப்பார்களாம்.

செல் சிதைவை சரி செய்யும் ஆண்டி ஆக்சிடெண்ட்களுக்கு ரெட் ஒயின் நல்லது. மிதமான அளவுகளில் குடித்தால் சில வகை கேன்சர், இதய நோய்கள், சர்க்கரை வியாதி போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

ரோஸ் ஒயின்

ரெட் ஒயினைவிட லேசாக இருக்கும் இந்த ரோஸ் ஒயின். ஃபிரெஷ்ஷான ஃப்ளேவரை உடையது இது. இந்த ஒயினில் ஸ்ட்ராபெரி, செர்ரி, சிட்ரெஸ், ராஸ்பெர்ரி ஆகிய பழங்களின் சுவை இருக்கும்.

மிதமான அளவுகளில் குடித்தால், இதிலுள்ள பாலிஃபீனால்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். மேலும் இதிலுள்ள பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

வெள்ளை ஒயின்

வெள்ளை ஒயின் மிகவும் மென்மையான ப்ளேவர் உடையது. அதைக் குளிர்வித்து ஃப்ரீஸ் செய்யாமல், நேரடியாக நீண்ட ட்யூலிப் க்ளாஸில் ஊற்றிக் குடிப்பார்கள். சிட்ரஸ் மற்றும் ஃபுளோரல் சுவைகளில் இந்த ஒயின் ருசியாக இருக்குமாம்.

வெள்ளை ஒயினில் ஆண்டி ஆக்சிடெண்ட் தாராளமாக உள்ளது. அவை இதயச் செயல்பாட்டை சீராக்கும். கண்களில் வரும் காட்ராக்ட் பிரச்னையைத் தவிர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com