நானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்?!

பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது
நானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்?!

தினமணி.காம் 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் வரிசையில் இன்று நாம் சந்திக்கவிருப்பது எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்தை...

நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் கையூட்டு மனப்பான்மை, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, எழுத்துலகில் பரவலாக முன்வைக்கப்படும் வணிக எழுத்து, இலக்கிய எழுத்து அக்கப்போர்கள் குறித்த விமர்சனங்கள், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையிலான வாசகபந்தம் எப்படி இருந்தால் அது உறுத்தாமல் இருக்கக் கூடும் எனப் பலப்பல விஷயங்களை இந்த நேர்காணலில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நேர்காணல் லிங்க்...

இவரது எழுத்தை நேசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

முக்கியமாக பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது இவரது எழுத்து.

இவரது நாவல்களும், சிறுகதைகளும் பலருக்கு ஆசுவாசம் அளித்திருக்கிறது.

வித்யா சுப்ரமணியத்துடனான 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களது அகக்கண்களைத் திறக்கச் செய்வதாக இருக்கும்.

நேர்காணலை முழுமையாகக் கண்ட வாசகர்கள் தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com