இனி உங்கள் செல்போனில் டிஸ்ப்ளே உடைந்தால் கவலை வேண்டாம்! இதோ தீர்வு

செல்போன் பயனாளர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை கைதவறி ஃபோனைக் கீழே போடுவதும்
இனி உங்கள் செல்போனில் டிஸ்ப்ளே உடைந்தால் கவலை வேண்டாம்! இதோ தீர்வு

செல்போன் பயனாளர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை கைதவறி ஃபோனைக் கீழே போடுவதும் உடனடியாக அதன் டிஸ்ப்ளே உடைவதுதான். இப்பிரச்னையை தீர்க்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டனர் ஜப்பானியர்.

போனில் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடைந்துவிட்டால் இனி கவலை வேண்டாம் என்கிறார்கள் ஜப்பான் ஆய்வாளர்கள். இதற்கான தீர்வாக அதனை நாமே சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு டிஸ்ப்ளே பகுதியை உருவாக்கியுள்ளனர். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் டாகுசோ ஐடா தலைமையில் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் டிஸ்ப்ளேவை கண்டுபிடித்துள்ளனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

பொதுவாக உடைந்த டிஸ்ப்ளேவை ஒட்டவைக்க, அதிக அளவு வெப்ப நிலைக்கு சூடாக்க வேண்டும். பின்னர்தான் ஒட்ட முடியும். பாலிஈதர்-தியோரிஸ் (polyether-thioureas)  எனும் பொருள் கொண்டு தயாரிக்கப்படும் டிஸ்ப்ளேக்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதனை மிக எளிதாக ஒட்ட வைத்து விடலாம். இது மிகுந்த எடை குறையுடன் இருக்கக் கூடிய ஒன்றாகும். இந்த வகை டிஸ்ப்ளே உடைந்தாலோ, விரிசல் விழுந்தாலோ, லேசாக அதனை அழுத்தி, இரு விரல்கள் மூலமே ஒட்டி விடலாமாம்.

இனி இஷ்டம் போல உங்கள் செல்போனில் புட்பால் விளையாடலாம்! டிஸ்ப்ளேயை உடைத்து மீண்டும் ஒட்டிக் கொள்ளலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com