வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி! தவறாக அனுப்பிய செய்தியை இனி திருத்தலாம்!

 வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி மற்றும்
வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி! தவறாக அனுப்பிய செய்தியை இனி திருத்தலாம்!

வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் வரப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுப்பிய செய்தியில் திருத்தங்கள் செய்யலாம்

தற்போது வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை திருத்திக் கொள்ள முடியாது. தவறாக அனுப்பினால் அது அப்படியே தான் போய்ச் சேரும். இனி ஒரு குறிஞ்செய்தியைத் திரும்பப் பெற விரும்பினால் அதைச் சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது. ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்துதான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.இதே போலவே செய்திகளைத் திருத்தும் வசதியும் அறிமுகமாக உள்ளது.அனுப்பிய செய்தியின் மீது கிளிக் செய்தால், அதைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புத் தோன்றும். அதை கிளிக் செய்து அந்தச் செய்தியை அழித்துவிடலாம். ஆனால் அனுப்பிய ஐந்து நிமிடத்துக்குள் இந்த திருத்தங்களை செய்துவிட வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வந்த ஒரு தகவல் இது. அனுப்பிவிட்டு திருத்தம் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்!

உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை வைத்து, உங்கள் வயதைச் சொல்லும் புதிர்க் கணக்கு இது. மூளைக்கான பயிற்சியும்கூட. வேலைப் பளு, மனஅழுத்தம் போன்ற விஷயங்களிலிருந்து விடுபட மூளைக்கு வேலை கொடுங்கள். அது உங்களை உற்சாகமாக மாற்றும். சிறு பிள்ளையைப் போல மனதை இலகுவாக்கும்.

இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்... 

நம்முடைய செல்போன் எண்ணை வைத்து, நம்முடைய வயதைக் கணிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

உங்கள் செல்ஃபோனின் கால்குலேட்டரை ஆன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப்-1: உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை 2 ஆல் பெருக்குங்கள்.

ஸ்டெப்-2: பெருக்கியதும் வரும் எண்ணுடன் 5-ஐ சேர்த்துக்கூட்டுங்கள். கூட்டிவிட்டீர்களா?

ஸ்டெப்-3: இப்போது கிடைக்கும்  எண்ணை  50ஆல் பெருக்குங்கள். பெருக்கி முடித்ததும் என்ன தொகை வருகிறதெனப் பாருங்கள்.

ஸ்டெப்-4: வரும் எண்ணுடன் 1,767 சேர்த்துக் கூட்டுங்கள்

ஸ்டெப்-5: இத்துடன் நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்களோ அந்த வருடத்தை வைத்துக் கழிக்கவும்.

இப்போது மூன்று டிஜிட்டில் வரும் முதல் எண், உங்கள் செல்ஃபோனின் கடைசி எண் ஆகும். மற்ற இரண்டு எண்கள்தான் உங்கள் வயது... கணக்கு சரியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com