விண்வெளியில் விளைந்த முட்டைக்கோஸ்!

விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் முறையாக சீன முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
விண்வெளியில் விளைந்த முட்டைக்கோஸ்!

விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் முறையாக சீன முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி ஒரு மாத காலத்தில் இந்த முட்டைக்கோஸ் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளதாவது:
விண்வெளி ஆய்வு வீரர் பெக்கி விட்சன் இந்த முட்டைக்கோஸை விளைவித்து அறுவடை செய்துள்ளார். அதில் சிலவற்றை விண்வெளி ஆய்வு மையத்தினரே அங்கேயே சாப்பிட்டுவிட்டனர். மீதமுள்ளதை நாசா கென்னடி விண்வெளி மையத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகை காய்கறிகளை ஆராய்ந்த பிறகு விண்வெளியில் பயிரிட இந்த சீன முட்டைக்கோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது விண்வெளியில் பயிரிடப்படும் ஐந்தாவது பயிராகும். முந்தைய பயிர்களை ஒப்பிடும்போது "டோக்யோ பெக்கன்னா' என்று அழைக்கப்படும் சீன முட்டைக்
கோஸ் சுவைமிகுந்ததாக இருந்தது.

வழக்கமாக விண்வெளியில் உள்ள ஆய்வு வீரர்களின் நாவின் சுவை குறைவாக இருக்கும். புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் நீர்சத்து உடல் முழுவதும் பரவி இருப்பது இதற்கு காரணம். இதற்காக அவர்கள் சாப்பிடும் உணவில் காரமான சாஸ், தேன், சோயா சாஸ் ஆகியவற்றை அதிமாகப் பயன்படுத்துவார்கள்.

விண்வெளி ஆய்வு மையத்தில் பயிரிடுவதற்காக அடுத்த பயிர் வகை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அது சீன முட்டைக்கோஸ் அருகே வைத்து பயிரிடப்படும். அப்போதுதான் எந்த பயிர் விரைவில் அறுவடைக்குத் தயாராகிறது என்பது குறித்தும் தெரிந்துவிடும். 

அடுத்த கட்டமாக அராபிடோபிஸ் எனப்படும் சிறிய வகை பூச்செடியைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளோம்.  இதன் மூலம் பூமிக்கு வெளியே உள்ள பல்வேறு சூழ்நிலைகளில் செடிகள் எப்படி தங்களை மாற்றிக் கொண்டு வளர்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் வருங்காலங்களில் விண்வெளியில் பயிர்த் தோட்டங்களை அமைக்கலாம் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com