டிரோன்களைக் கட்டுப்படுத்தும் “துப்பாக்கி”- சீனக் கண்டுபிடிப்பு!

ஏவுகணைகளையும், அணுகுண்டுகளையும் தாக்கி அழிக்க அதிநவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்த வல்லரசு நாடுகளே, டிரோன்கள் எனப்படும் சிறிய ரக பறக்கும் கருவிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் டிரோன்களில் குண்டுகளை வைத்து அனுப்பி வெடிக்கச் செய்ய பயங்கரவாதிகள் சதித் திட்டங்களைத் தீட்டுகின்றனர். மிக எளிமையான முறையில் நடத்தப்படும் இந்த வகையான தாக்குதல்களால் ஏராளமான மக்கள் உயிரிழப்பார்கள். வெடி மருந்தைச் சுமந்து வரும் டிரோன்களைச் சுட்டு வீழ்த்தினாலும் அது ஆபத்துதான் என்பதால், டிரோன்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.

இந்த சவாலை சீனா வென்று சாதனை படைத்துள்ளது. ஆம், சட்ட விரோதமாக பறக்கும் டிரோன்களை ரேடியோ சிக்னல் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கம் செய்யும் அதிநவீன துப்பாக்கிகளை சீன போலீஸார் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பறக்கும் டிரோன்களையும் இந்த துப்பாக்கிகள் ரேடியோ சிக்னல் மூலம் சுண்டி இழுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுமாம். இதன் விலை ரூ. 25 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com