உலகின் முதல் பெரிய அளவிலான ஆளில்லா விமானம் 'இக்கானா'!

ரிமோட் மூலம் பறக்கவிடப்படும் குட்டி விமானங்களை (டுரோன்) நாம் பார்த்திருப்போம்
உலகின் முதல் பெரிய அளவிலான ஆளில்லா விமானம் 'இக்கானா'!

ரிமோட் மூலம் பறக்கவிடப்படும் குட்டி விமானங்களை (டுரோன்) நாம் பார்த்திருப்போம். இவற்றின் செயல்பாடு பல்வேறு சூழ்நிலைகளில் மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. அதேபோல் ராணுவத்தில், வேவு பார்ப்பதற்கும், வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்கவும், ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, உலகிலேயே முதல் முறையாக பயணிகள் விமானத்தைப் போன்ற பெரிய அளவிலான ஆளில்லா விமானமான 'இக்கானா' வை, பயணிகள் போக்குவரத்து பாதையிலேயே இயக்கி சாதனை படைத்துள்ளது.

வழக்கமாக நாசாவின் பெரிய ஆளில்லா விமானமான இக்கானா செல்லும் போது, அதற்கு பாதுகாப்பாக ஒரு விமானம் பின்நோக்கியே பறக்கும். ஆனால் இந்த முறை விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்தவாறே அந்த பெரிய விமானத்தை, வெற்றிகரமாக எந்தவித பாதிப்புமின்றி செலுத்தி இக்கானாவின் விமானி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனை, வரும் காலங்களில் பயணிகள் விமானங்களையும், விமானிகள் இல்லாமலேயே இயக்குவதற்கான முதல் மைல்கல்லாகும்.

இக்கானா விமானம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எட்வர்ட் விமான படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு, வானில் 20,000 அடி உயரத்தில் (பயணிகள் விமானங்கள் பறக்கும் பாதையில்) பறந்து, பின்னர் சிறிய விமானங்கள் பறக்கும் பாதைக்கு கீழ் இறங்கி பறந்து, வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதற்காக அமெரிக்க விமானப் போக்குவரத்துதுறையிடம் நாசா சிறப்பு அனுமதி பெற்றிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com