இந்த தலையணையின் விலை ரூ.14,000! அப்படியென்ன அதிசயமிருக்கிறது இதில்?!

குறட்டை அரக்கனை இனம்கண்டு குறட்டையொலி முற்றும் போதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு ‘ஏய் நீ ரொம்பத்தான் குறட்டை விடறேப்பா... கொஞ்சம் நகர்ந்து படு... குறட்டை நிற்கும்’ என எச்சரிக்கை  தருமாம் இந்தத்தலையணை
இந்த தலையணையின் விலை ரூ.14,000! அப்படியென்ன அதிசயமிருக்கிறது இதில்?!

ஒரு தலையணைக்குப் போய் இத்தனை விலையா? என்று அதிசயமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பாருங்கள் அதன் பலனைப் பற்றி யோசித்துப் பார்க்கையில்... பணமிருப்பவர்களுக்கு போனால் போகிறது ஒரு தலையணை வாங்கிப் போட்டு விட்டால் தேவலாம் என்று கூடத் தோன்றலாம். அப்படியொரு அசாத்திய பலன் இதற்குண்டு.

உலகில் யானைப்படைக்கு கூட அசராதவர்கள் இருக்கலாம், ஆனால் ஆழ்ந்து உறங்கும் போது சக ஸ்லீப்மேட்டுகளிடமிருந்து (கூடச் சேர்ந்து தூங்கறவங்களை ஸ்லீப்மேட்னு சொன்னா தப்பில்லை) கிளர்ந்தெழுந்து வரக்கூடிய லெளட்ஸ்பீக்கர் டைப் குறட்டைகளைக் கண்டு பயந்து போய் மிரளாதவர்கள் இந்த உலகிலேயே இல்லை. அப்படியாப்பட்ட குறட்டை அரக்கனை இனம்கண்டு குறட்டையொலி முற்றும் போதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு ‘ஏய் நீ ரொம்பத்தான் குறட்டை விடறேப்பா... கொஞ்சம் நகர்ந்து படு... குறட்டை நிற்கும்’ என எச்சரிக்கை  தருமாம் இந்தத்தலையணை.

இப்படியான எச்சரிக்கைகளை வழங்கும்  வகையில் இந்தத் தலையணையின் உள்ளே 8 பில்ட் இன் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தூங்கும் போது அவற்றில் பாட்டு கேட்கலாம், ஆடியோ புத்தகங்களை வாசிக்கலாம். உங்களது முந்தைய, பிந்தைய ஸ்லீப் ரெகார்டுகளை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்தத் தலையணையின் உறை ஹைப்போ அலர்ஜெனிக் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டுள்ளது. தலையணையின் உள்ளே தலை மற்றும் பின் கழுத்துப் பகுதியின் செளகர்யத்துக்காக அதி மிருதுத்தன்மை வாய்ந்த மெமரி ஃபோம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அப்படியானால் இந்தத் தலையணையின் விலை 14,000 ரூபாய் என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறீர்களா?! இந்தத் தலையணை மார்க்கெட்டில் புதுசு. இந்தியாவில் இன்னும் விற்பனை தொடங்கியிருக்க சாத்தியமில்லாமலும் இருக்கலாம். இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள வசதியுண்டு என்கிறது இதன் தயாரிப்பு நிறுவனம்.

மேலதிக விவரங்களுக்கு shop.rem-fit.com/ எனும் இணையதளத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com