தண்ணீரைக் குடித்த உடன் மறைந்து போகும் பாட்டில் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? 

தண்ணீர் பாட்டில்கள், மனிதர்களின் உயிரைக் குடிக்கும் நச்சுகளாக மாறி வருகின்றன.
தண்ணீரைக் குடித்த உடன் மறைந்து போகும் பாட்டில் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? 

தண்ணீர் பாட்டில்கள், மனிதர்களின் உயிரைக் குடிக்கும் நச்சுகளாக மாறி வருகின்றன. ஒரு தண்ணீர் பாட்டில் மக்கி அழிய சுமார் 400 ஆண்டுகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவிக்கின்றனர். 

இன்னும் சில ஆண்டுகளில் கடலில் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு நிலத்தை விட கடலில்தான் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகக் கொட்டப்படுகின்றன.

ஒரு நொடிக்கு, உலகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் வாங்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தண்ணீர் பாட்டில் அழிவதற்குள் உலகம் நிலைக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது. இந்த கேள்விக்கு விடைகாணும் வகையில், அருந்தியதும் அழியும் தண்ணீர் பாட்டிலை ஐலாந்த் நாட்டைச் சேர்ந்த மாணவர் அரி ஜான்சன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவரது கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு அவர் கடற்பாசியை பயன்படுத்தி உள்ளார். இந்த கடற்பாசியை தூளாக்கி தண்ணீரில் கலந்து, பாட்டில் வடிவத்தில் உருவாக்கியுள்ளார். இந்த பாட்டிலில் நிரப்பப்பட்ட தண்ணீரை அருந்திய உடனேயே பாட்டிலும் அழிந்து விடுகிறது. தேவைப்பட்டால் பாட்டிலையும் நாம் சாப்பிட்டுவிடலாம் என்றும் இந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் பாதுகாப்பானது என்றும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் மாணவர் அரி ஜான்சன்.

என்னதான் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தாலும், இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும், பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வதைத் தடுக்காமல் சுற்றுச் சூழலையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com