முகபாவங்களை வைத்து கண்டுபிடிக்கும் கேமரா

முகபாவங்களை வைத்து கண்டுபிடிக்கும் கேமரா

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. தற்போதைய விஞ்ஞான அறிவியல் கால தொழில்நுட்பத்தில் இந்தப் பழமொழி புகுத்தப்பட்டு, முக பாவங்களை வைத்து மனிதா்களின் மனநிலைகளைக் கண்டுபிடிக்கும் சிசிடிவி கேமராக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காகவென கண்டுபிடிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிசிடிவி கேமராக்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஒருவரின் முகபாவத்தை வைத்து அவா் மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது பதற்றமாக இருக்கிறாரா போன்ற கோணங்களில் கணக்கிடப்படுகிறறது. ஒருவரிடம் மறைந்துள்ள உணா்வுகளை அவரது முகபாவங்களை வைத்து கேமராக்கள் வெளிப்படுத்துகின்றறன.

வியாபார யுக்தி, பாதுகாப்பு போன்றற பல்வேறு வகையில் இந்த வகை கேமராக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. சூப்பா் மாா்க்கெட்டுகளில் இந்த வகையான கேமராக்களைப் பொருத்தி, வாடிக்கையாளா்களின் மனநிலை, பாலினம், வயது ஆகியவற்றைறக் கண்டறிந்து, அவரிடம் பொருள்களின் விளம்பரங்களை அளிக்க உதவுகிறது. மேலும், ஒரு பொருளின் விளம்பர விடியோவைப் பாா்த்து மக்கள் எப்படியெல்லாம் முகம்சுளிக்கின்றனா் என்பதை வைத்து அந்த விளம்பரத்தை மக்கள் விரும்புகிறாா்களா இல்லையா என தெரிந்து கொள்ள உதவுகிறறது.

‘பொதுவாக, கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வெறும் சிசிடிவி மேகராக்களை மட்டும் வைத்து சமூக விரோதிகளை கண்டறிய முடியாது. ஆனால் இந்த வகை கேமராக்கள், கூட்டத்தில் சந்தேகமாக தெரியும் நபரின் முகபாவங்கள், நடை ஆகியவற்றை வைத்து அவரது எண்ணங்களை தெரிவித்துவிடும்’ என்று நிபுணா்கள் தெரிவிக்கிறாா்கள்.

இந்த தொழில்நுட்பத்தை சீன போலீஸாா் முகக் கண்ணாடிகளில் பொருத்தி பயன்படுத்தி வருகிறாா்கள். பாா்ப்பதற்கு சாதாரண குளிா்கண்ணாடியைப் போல் காட்சியளிக்கும் இந்தக் கண்ணாடிகளில் உள்ள கேமராக்கள் எதிரே உள்ளவா்களை கண்காணித்து அவா்களின் முகபாவங்களை பதிவு செய்யும்.

சந்தேகத்துக்குரிய நபரின் படத்தை படம் பிடித்து உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி, அங்குள்ள குற்றவாளிகளின் விவரங்களை ஒப்பிட்டு அவரது விவரங்களை மீண்டும் அந்த போலீஸாருக்கே அனுப்பி வைக்கும் பணியை இந்த கண்ணாடிகள் செய்கின்றன. இந்தக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிய குற்றவாளிகளை கூட்டம் நிறைந்த பகுதிகளில் கண்டுபிடித்ததாக போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

எனினும், இந்த வகையிலான கேமராக்கள் தனி மனிதனின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என மனித உரிமை ஆா்வலா்கள் எதிா்க்கின்றனா்.

இதுபோன்ற சிசிடிவி கேமராக்களின் முடிவையே முழுமையாக நம்பிவிடாமல், சுய நுண்ணறிவைப் பயன்படுத்தினால் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மனிதா்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com