ஸ்மார்ட்போன் போதையிருந்து விலக நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்களா?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரே கருவி 'ஸ்மார்ட் போன்'.
ஸ்மார்ட்போன் போதையிருந்து விலக நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்களா?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரே கருவி 'ஸ்மார்ட் போன்'. ஸ்மார்ட்போன் போதையில் இருந்து தங்கள் குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படும்பாடு சொல்ல மாலாது.
காரணம் ஸ்மார்ட் போன்களில் உள்ள விளையாட்டு மற்றும் சமூக இணையதள ஆப்கள், அதில் நொடிக்கு நொடிக்கு வரும் 'நோட்டிபிகேஷன்'களும் தான் காரணம். இது பயன்பாட்டாளர்களை மயக்கி அடிமையாக்கிவிடுகிறது. இதில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் அது நடப்பதில்லை. 

ஸ்மார்டபோன்களை உற்று நோக்கி பார்த்து கொண்டே நமது அன்றாடப் பணிகளைத் தொடர்வது வியாதியாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், அதில் இருந்து விடுபட புதிய ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சியம்போ (siempo) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வித்தியாசமான ஆப்பை பதிவிறக்கம் செய்தால்போதும், அது நமது கவனத்தை ஸ்மார்ட் போனில் இருந்து திசை திருப்புகிறது.

சமூக வலைதளங்களின் முக்கிய அம்சமே அவ்வப்போது வரும் தகவல்கள்தான் (நோட்டிபிகேஷன்). இந்த சியம்போ ஆப், அவ்வப்போது வரும் தகவல்களைக் காண்பிக்காது. நமது விருப்பத்துக்கு ஏற்ப இந்தத் தகவல்களை அரை மணி நேரத்துக்கோ, ஒரு மணி நேரத்துக்கோ அல்லது ஒரு நாளில் ஒரு முறையோ காண்பிக்க நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும், ஸ்மார்ட் போன்களில், ஆப்கள் நிறைந்த வண்ணமயமான முகப்பு திரைதான் நமது கவனத்தை அதிகமாக ஈர்ப்பதால், இந்த சியம்போ ஆப், முகப்பு திரையை கருப்பு, வெள்ளை நிறத்தில் மாற்றிவிடுகிறது. அதில், அவசிய தேவையான முக்கியமான ஆப்கள் சிறிய வடிவத்தில் இடம் பெற்றிருக்கும். இதனால் அவை நமது கவனத்தை ஈர்க்காது. தேவைப்பட்டால் சமூக வலைதள ஆப்களையும் நாம் அதில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த ஆப்பின் முதல் எழுத்து மட்டுமே சிறிய அளவில் அங்கு இடம் பெறும்.

முகநூலில் ஒருவர் நமது படத்துக்கு விருப்பம் தெரிவித்திருந்தாலோ, சுட்டுரையில் ஒருவர் நமது கருத்தைக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ எந்தத் தகவலும் ஸ்மார்ட் போனில் காண்பிக்காது.

இதனால் நமது கவனம் ஸ்மார்ட் போன் மீது நொடிக்கு நொடி திரும்பாது என்பதால், ஸ்மார்ட் போன் போதைக்கு அடிமையானவர்கள் மெல்ல மெல்ல விடுபடுவார்கள். 'ஸ்மார்ட் போனை அதிக அளவு பயன்படுத்துவதைக் குறைத்து, சுயகட்டுப்பாடு செய்து கொள்ள உருவாக்கப்பட்ட ஆப் இது' என்றும் சியம்போ தலைமைச் செயல் அதிகாரி ஆன்ட்ரீவ் டன் தெரிவிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com