டிசம்பர் 29 சென்னை கிண்டியில் ‘அரிசி உமியில் இருந்து சிலிகா’ தயாரிக்க பயிலரங்கம்!

தொழில் முனைவோர், தொழில் ஆர்வம் உள்ளவர்கள் பயனடையும் வகையில் அரிசி தவிட்டு சாம்பலில் இருந்து சிலிகா தயாரித்தல் தொடர்பான பயிலரங்கம் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
டிசம்பர் 29 சென்னை கிண்டியில் ‘அரிசி உமியில் இருந்து சிலிகா’ தயாரிக்க பயிலரங்கம்!

தொழில் முனைவோர், தொழில் ஆர்வம் உள்ளவர்கள் பயனடையும் வகையில் அரிசி தவிட்டு சாம்பலில் இருந்து சிலிகா தயாரித்தல் தொடர்பான பயிலரங்கம் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நெல்லில் இருந்து அரிசி நீக்கியதும் கிடைக்கும் உமி எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
அதையடுத்து, அந்தச் சாம்பலை அகற்றுவதில் ஆலைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.
இதற்கு மாற்றாக சாம்பலில் இருந்து சிலிகா என்ற பொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த முடியும் என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தொழில் முனைவோர்களுக்கு பயனடையும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளித்துவரும் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் இந்தத் தொழிலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து பயிலரங்கை நடத்த உள்ளது.
தொழில் தொடங்கத் தேவையான முதலீடு ஆய்வு குறித்து குறிப்பிட்ட நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது.
இதில் சிலிகா தயாரிக்கும் இயந்திர உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பங்கேற்று அரிசி ஆலை நடத்துகிறவர்களுக்கு விளக்கமாக கருத்துக்களை எடுத்துரைக்க இருக்கின்றனர். இதேபோல், இத்தொழிலில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும், ஆய்வு மேற்கொள்கிற கல்லூரி, ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று பயிலரங்கத்தில் ஆலோசனைகளை வழங்கவும் இருக்கின்றனர்.
இதில் 1 டன் சிலிகா உற்பத்தி திறனுள்ள தொழில் தொடங்குவதற்கு சுமார் ரூ.1.05 கோடி முதலீடு தேவை. அதனால் இத்தொழிலை தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் இப்பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இது குறித்து தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தொலைபேசி எண்கள்-044-22252081, 044-22252082 அல்லது 9840991716 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொண்டு பயனடையலாம் என அந்த மையத்தின் துணை இயக்குநர் தே.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com