சென்னையில் ஜனவரி 5 முதல் 12 வரை சர்வதேசத் திரைப்பட விழா!

www.ticketnew.com என்ற இணையத்தில் நுழைவுக் கட்டணங்களை பதிவு செய்து கொள்ளலாம். 
சென்னையில் ஜனவரி 5 முதல் 12 வரை சர்வதேசத் திரைப்பட விழா!

சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
உலக சினிமாக்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, தமிழில் வெளிவந்த சிறந்த படங்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழா, 14-ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் இந்த விழா, ஜனவரி  12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சர்வதேசப் படங்களின் அணிவகுப்பு: தமிழக அரசின் துணையோடு இந்திய திரைப்பட திறனாய்வு கழகமானது தமிழ்த் திரை அமைப்புகளோடு, "இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுன்டேஷன்' இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவின் சிறப்பு அம்சமாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 180-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
ஈரான், கொரியா, ஆஸ்திரியா, துருக்கி, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், நேபாளம், நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச படங்கள் இதில் அணி வகுக்கவுள்ளன. தமிழ் சினிமாவுக்கான போட்டிப் பிரிவில் கடந்த ஆண்டு வெளிவந்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களும் திரையிடப்படவுள்ளன.
இந்தியன் பனோரமா பிரிவில் 15 படங்களும், சர்வதேச அளவில் விருதுகளும், ஏகோபித்த விமர்சனங்களையும் பெற்ற படங்களும் இடம் பிடிக்கின்றன. உலகப் படங்களின் வரிசையில் ஆஸ்கர் விருது மேடையை அலங்கரித்த பல படங்களும் இடம் திரையிடப்படவுள்ளன.
விருதுகள்: விழாவின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. www.ticketnew.com என்ற இணையத்தில் நுழைவுக் கட்டணங்களை பதிவு செய்து கொள்ளலாம். 

முன்னதாக டிசம்பர் 15 ல் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பை முன்னிட்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com