அக்டோ 26 மயிலையில் ‘டி. பாலசரஸ்வதியின் நாட்டியக் கலைப்பயணம்’ உரையாடல் நிகழ்வு!

டி.பாலசரஸ்வதி அவர்களின் நேரடி சிஷ்யையான  அமெரிக்க நாட்டியக் கலைஞர் ’கே போர்ஷின்’ தனது குரு பாலசரஸ்வதியுடனான தனது கலைப்பயண அனுபவங்களைப் பற்றி பரதக் கலாரசிகர்களுடன் விரிவாக உரையாடவிருக்கிறார்.
அக்டோ 26 மயிலையில் ‘டி. பாலசரஸ்வதியின் நாட்டியக் கலைப்பயணம்’ உரையாடல் நிகழ்வு!

குமாரி கமலா, பத்மினி, வைஜயந்தி மாலா வரிசையில் பரதக் கலைஞர் டி.பாலசரஸ்வதியை நாட்டியப் பிரியர்கள் அனேகம் பேருக்கு தெரிந்தே இருக்கும். பரதக் கலையை உலகமெலாம் ரசனையுடன் கொண்டு சேர்த்ததில் அவர் ஒரு லெஜண்ட். அவரைப் பற்றியும் அவரது கலை உலகப் பயணத்தைப் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அக்டோ 26 மாலை 6.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துச் சாலையில் இயங்கும் பி.எஸ் உயர்நிலைப் பள்ளியின் விவேகானந்தா ஹாலுக்கு வருகை தரலாம்.

அங்கு டி.பாலசரஸ்வதி அவர்களின் நேரடி சிஷ்யையான  அமெரிக்க நாட்டியக் கலைஞர் ’கே போர்ஷின்’ தனது குரு பாலசரஸ்வதியுடனான தனது கலைப்பயண அனுபவங்களைப் பற்றி பரதக் கலாரசிகர்களுடன் விரிவாக உரையாடவிருக்கிறார். இந்த நிகழ்வை டாக்டர்.வி. ராகவனின் ’பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ மையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. 

நிகழ்வு: அக்டோ 26 

நேரம்: மாலை 6.30 மணி அளவில்

அட்ரஸ்: விவேகானந்தா ஹால், பி.எஸ் உயர் நிலைப் பள்ளி, ராமகிருஷ்ண மடத்துச் சாலை, மயிலாப்பூர், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com