உங்கள் குக்கரை இப்படியெல்லாம் பராமரிக்கலாமே!

குக்கரைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்கக் கூடாது. அப்படித் தேய்த்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்து விடும். 
உங்கள் குக்கரை இப்படியெல்லாம் பராமரிக்கலாமே!
  • குக்கரைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்கக் கூடாது. அப்படித் தேய்த்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்து விடும். 
  • குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் பிரிஜ்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப்பார்த்தால் சரியாக இருக்கும்.
  • குக்கரின் அடியில் பழுப்பு நிறம் சேர்ந்துவிட்டால் அதை எலுமிச்சைத் தோலால் தேய்த்துவிட்டு பிறகு காலி மாத்திரை அட்டைகளால் தேய்த்தால் மிகவும்  பளிச்சென்று ஆகிவிடும்.
  • பிரஷர் குக்கரில் உள்ள ‘காஸ்கெட்’டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டுவிட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
  • புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் நமக்கே தெரியாமல்  மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
  • குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப்பிடிக்காமல் இருக்கும்.
  • குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
  • குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
  • குக்கரில் காய்கறி வேகும் போது அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

சில சமயம் குக்கரின் உட்புறம் நிறம் மாறிப் போகிறேதே ஏன்?

குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக் கறையுள்ள அளவு ஊற்றி 2,3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.

தரம் குறைந்த அலுமினிய உள்பாத்திரம், டிரிவெட்டை உபயோகிப்பதால் நிறம் மங்கிக் காணப்படும்.

சமையல் செய்யும் போழுது குக்கரில் ஊற்றப்படும் நீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு விட்டால் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.

 - நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com