அடிக்கடி பவர் கட்டா? மிக்ஸி, கிரைண்டரில் அரைக்காமலே தேங்காய்ப் பால் எடுக்க எளிய டிப்ஸ்!

சரி... இப்போது இந்த பவர் கட் வேளையில் குறைந்த பட்சம் உங்கள் விருந்தினர்களுக்கு தேங்காய்ப் பால் பிரியாணி செய்து போட்டு அசத்த வேண்டும் என்று உங்களுக்கு ஆசை!
அடிக்கடி பவர் கட்டா? மிக்ஸி, கிரைண்டரில் அரைக்காமலே தேங்காய்ப் பால் எடுக்க எளிய டிப்ஸ்!

சென்ற ஆண்டுகளைப் போலவே இப்போதெல்லாம் அடிக்கடி பல இடங்களில் பவர் கட் பிரச்னை வந்து விட்டது. 

கோடை காலம் வந்தாலே இது ஒரு பெரிய தொல்லையாகி விடுகிறது. கோடையில் தான் நமக்கெல்லாம் விடுமுறை நாட்கள் அதிகம் இருக்கும். அப்போது தான் வீட்டுக்கு வராத விருந்தினர்கள் எல்லாம் வந்து போக நேரிடும். வராதவர்கள் வந்தால் என்ன செய்வோம்? நான்கந்து நாட்கள் நம் வீட்டில் தங்க வைத்து, வாய்க்கு ருசியாக சமைத்து அசத்தி, ஊர் சுற்றிக் காட்டி, புதுத் துணிமணிகள் எடுத்துத் தந்து வந்த விருந்தினர்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்த நினைப்போம். இந்த பாழாய்ப்போன பவர்கட்டால் அந்தக் கனவுகளில் எல்லாம் மண் விழுந்து விட்டால் எப்படி? அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள். கோடை என்றால் தமிழ்நாட்டில் பவர் கட் பிரச்னை இலவச இணைப்பாச்சே! அதையெல்லாம் தலைகீழாக நின்றாலும் நம்மால் மாற்ற முடியாது என்கிறீர்களா? 

அதுவும் சரி தான். இப்போதெல்லாம் இன்வெர்டர்கள் வந்தாச்சு. ஆனாலும் இந்த மிக்ஸி, கிரைண்டர்களை அதில் பயன்படுத்தினோம் என்றால் அவை அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாது. பிறகு மிக்ஸி, கிரைண்டரில் அரைத்துச் சமைக்க ஆசைப்பட்டு இன்வெர்ட்டரில் பேட்டரி தீர்ந்து பிறகு கரண்ட் வரும் வரை  ஃபேன் இல்லாமல் வியர்த்து வழிந்து கொண்டு அரசாங்கத்தையும், மின் வாரியத்தையும் சபித்துக் கொண்டு உட்கார வேண்டியது தான்.

சரி... இப்போது இந்த பவர் கட் வேளையில் குறைந்த பட்சம் உங்கள் விருந்தினர்களுக்கு தேங்காய்ப் பால் பிரியாணி செய்து போட்டு அசத்த வேண்டும் என்று உங்களுக்கு ஆசை! ஆனால், பவர் கட். என்ன செய்யலாம் இப்போது?

தேங்காய்ப் பால் அரைத்தெடுக்க மிக்ஸி வேண்டாம், கிரைண்டர் வேண்டாம். தேங்காய்த்துருவி மட்டும் போதும்.

துருவியால் முற்றிய தேங்காயை நன்கு துருவி தேங்காய்ப்பூ எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு சிறு வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்க வைத்து அந்தக் கொதிக்கும் நீரில் துருவி வைத்த தேங்காய்ப்பூவைப் போடுங்கள். 

தேங்காய்ப்பூ ஊறிய நீர் கை பொறுக்கும் சூடு வந்தவுடன் ஒரு மெல்லிய வெள்ளைத்துணியில் அதை வடிகட்டினால் மிதமான சூட்டுடன் கெட்டியான தேங்காய்ப்பால் கிடைக்கும். இதைக் கொண்டு அனைத்து வகை பிரியாணி, தக்காளிச்சாதம், புதினாச்சாதம், பாயசம், காரக் குழம்பு வகைகள், எனச் செய்து அசத்தலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com