தனிமையில் இருக்கும் பெண்களின் ஆபத்பாந்தவன் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அதை பக்காவாக வீட்டில் தயாரிப்பது எப்படி?!

பெப்பர் ஸ்ப்ரேக்கள் தற்போது மார்க்கெட்டில் அனைத்துப் பெரிய கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. என்றாலும் பெண்களில் பலருக்கு இந்த பெப்பர் ஸ்ப்ரேக்களை நாமே சொந்தமாக வீட்டிலேயே
தனிமையில் இருக்கும் பெண்களின் ஆபத்பாந்தவன் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அதை பக்காவாக வீட்டில் தயாரிப்பது எப்படி?!

பெண்கள் தனியே இருக்கையில் மட்டுமல்ல பலர் சூழ்ந்திருக்கும் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளிலும் கூட இப்போதெல்லாம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சங்கிலித் திருடர்களால் தாக்கப்படுகிறார்கள். கடத்தல்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் எனும்படியான செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படியான சமயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்கள் தற்காப்புக் கலைகளைப் பயில முன்வர வேண்டும் என அரசும், மகளிர் அமைப்புகளும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மகளிர் தன்னார்வ அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களில் சில தனியாக இருக்கும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு ‘பெப்பர் ஸ்ப்ரே’ போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரித்து அளிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளான இந்த பெப்பர் ஸ்ப்ரேக்கள் தற்போது மார்க்கெட்டில் அனைத்துப் பெரிய கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. என்றாலும் பெண்களில் பலருக்கு இந்த பெப்பர் ஸ்ப்ரேக்களை நாமே சொந்தமாக வீட்டிலேயே தயாரிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமிருக்கக் கூடும். அப்படி யோசிப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த தயாரிப்பு முறையை அளித்திருக்கிறோம். தேவை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்ப்ரே தயாரிப்பில் இறங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

கைகளுக்கு கிளவுஸ் மற்றும் கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். ஏனெனில் சிலருக்கு மிளகாய்த்தூள், மிளகுத்தூள் நெடி கண்டமாத்திரத்தில் நெடி மூக்கிலேறி அடுக்குத் தும்மலோ, இருமலோ உண்டாகி பிராணனை வாங்கி விடும் அபாயம் உண்டு. எனவே பாதுகாப்புக் கவசங்களுடன் பணியில் இறங்குவதே உத்தமம்.

தேவையான பொருட்கள்

  • வினிகர் : 2 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் துகள்கள்: 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள்: 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகுத்தூள்: 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
  • பெளல் - 1
  • ஸ்ப்ரே பாட்டில்: 1


தயாரிக்கும் முறை

ஒரு பெளல் எடுத்துக் கொண்டு மேற்கண்ட பொருட்களை எல்லாம் அதில் கொட்டி நன்கு கலக்கவும். கலக்கும் போது பெப்பர் ஸ்ப்ரே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிளகாய்த்தூள் அலர்ஜி இருப்பின் நாசியை கைக்குட்டையால் கட்டிக் கொண்டு வேலையில் இறங்கவும். இல்லையேல் நீங்கள் தயாரிக்கக் கூடிய பெப்பர் ஸ்ப்ரே முதன்முதலாக உங்களையே பதம் பார்த்து விடக்கூடும். பொருட்கள் அனைத்தும் வினிகரில் நன்கு கலந்த பின் அதை அப்படியே எடுத்து துளி கீழே சிந்தாமல், சிதறாமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். ஸ்ப்ரே பாட்டிலின் மூடிப்பகுதி இறுக்கமாக இருக்க வேண்டும். தளர்வாக இருந்தால் பெப்பர் ஸ்ப்ரே சிறிது, சிறிதாகக் கசிந்து தேவையற்ற உபத்ரவத்தை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே ஸ்ப்ரே கலவை பாட்டிலில் இருந்து கசியா வண்ணம் இறுக்கமான மூடியாகத் தேர்ந்தெடுத்து சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இப்போது நீங்களே உங்கள் கைகளால் தயாரித்த ‘பெப்பர் ஸ்ப்ரே’ ரெடி.

Image courtesy: DIY Youtube chanel.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com