சினிமா வாழ்க்கை ஆரம்பம்...

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாகப் பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து
சினிமா வாழ்க்கை ஆரம்பம்...

அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த ‘உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில்’ சேர எம்.ஜி.ஆர், சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாகப் பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர், தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்குப் புறப்பட்டார்.

ரங்கூனுக்கு சென்று திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு காளி என்.ரத்தினம் ஆவார். 

யானையடி பள்ளிக்கு வந்த எம்.ஜி.ஆர்...

எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்ததாம்.  எதிரே காயான்குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ள பள்ளி பழைய இடத்திலிருந்து சற்று இடம் பெயர்ந்திருக்கிறது. 

அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் நாகேஸ்வரம் வடக்கு வீதி என அழைக்கப்படுகிறது. முன்பிருந்த இடம் இப்போது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டது. கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர். 

ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபாணியையும் சேர்த்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர்... மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதைப் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம். 

எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போலவே விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ்வு மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம். கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம். பள்ளியில் நடந்த ‘லவகுசா’ நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார். இந்த நாடகம் தான், நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.

பள்ளிப் பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும், வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம். எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியை விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம். 

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின், ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை ‘முனு ஆதி’ திறந்து வைத்தார். 30-10-1977 ல் தஞ்சை மாவட்டப் பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியைச் சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களைப் பார்த்தார்.

எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாகக் குறிப்பிட்டார்.

சினிமா வாழ்க்கை ஆரம்பம்...

தமிழ் சினிமாவில் ஆரம்ப கால முன்னணி நகைச்சுவை நடிகையாக இருந்து வந்தார் சி.டி. ராஜகாந்தம்.

அந்தச் சமயத்தில் தான் "சதிலீலாவதி" படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.

அதைத் தொடர்ந்து தி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த இரு சகோதரர்கள் படத்தில் எம்.ஜீ.ஆர் மட்டுமின்றி, சக்ரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கதாநாயகன் ஆனார்...

சாலிவாகனன் படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார். அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். ராஜகுமாரி என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள். 

குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம் என்றார்.

செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.

ராஜகுமாரி படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.

தொடரும்...

கட்டுரை உதவி: S.பாக்யா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com